விஜயாவை புழிந்து எடுக்கும் பாட்டி… ரோகினியை கோர்த்து விட பார்க்கும் மனோஜ்.. அப்புறம் என்ன கும்மாங்குத்து தான்..

siragadikka aasai may 17 episode
siragadikka aasai may 17 episode

siragadikka aasai may 17 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டி வீட்டிற்கு வருகிறார் முத்துவிற்கு கல்யாண நாள் என்பதால் அவர் வந்துள்ளார் இதனை முத்துவின் பாட்டி உங்களுக்கு கல்யாணம் நாள் என்பது எனக்கு தெரியாதா? அதனால் தான் வந்தேன் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்த வருஷம் ஒரு குழந்தை குட்டி ஓட சந்தோசமா இருக்கணும் என பேசுகிறார் அதற்கு விஜயா முறைக்கிறார். வீட்ல மூத்தவன் இருக்கும்போது இவனுக்கு என்ன அவசரம் என்பது போல் விஜயா பேச அதற்கு இவங்க தானே பஸ்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் பாட்டி எனக்கு எல்லா பேரன்களும் ஒரே மாதிரி தான் உன்ன மாதிரி கிடையாது எனவும் கூறுகிறார்.

இந்த நிலையில் முத்து மீனாவுக்காக ஒரு மோதிரம் வாங்கியுள்ளார் அதனை பாட்டியிடம் காட்டி இதை போட்டுவிடு எனக் கூற நீயே போட்டு விடு என முத்துவிடம் பாட்டி கூறுகிறார் உன்ன நெனச்சு எனக்கு பெருமையா இருக்குடா இந்த அளவு நீ மாறுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல என பாட்டி கூறுகிறார். பிறகு ஆசிர்வாதம் வாங்க முத்து அப்பாவையும் விஜயாவையும் கூப்பிட விஜயா  ஓரமாக நிற்கிறார் உடனே பாட்டி உனக்கு என்ன கால் நொண்டியா வந்து ஒன்னா நில்லு என பேசுகிறார்.

காலில் விழுந்த ஆசிர்வாதம் வாங்குகிறார் அப்பொழுது பாட்டி மருமகளை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடு என கூறுகிறார் உடனே விஜயா மீனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். அண்ணாமலை மீனா மற்றும் முத்துவை இருவரும் அம்மா வீட்டுக்கு போயிட்டு வாங்கள் என கூறுகிறார் உடனே பாட்டியும் அதையே சொல்கிறார். அண்ணாமலை பாட்டியிடம் மதியம் பங்க்ஷன் இருக்கு அதனால நீங்க சீக்கிரம் போயிட்டு வரட்டும் எனவும் பேசுகிறார்.

முத்து மீனாவின் வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அக்கம்பக்கத்தினர் அனைவரும் விசாரிக்கிறார்கள் வாழ்த்துகிறார்கள் இந்த நிலையில் மேலே சென்ற முத்து சேரில் உட்காருகிறார் அப்பொழுது சீத்தா சூப் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் உடனே முத்துவின் மச்சினிச்சி இந்த சட்டை சூப்பராக இருக்கிறது என கூற அதற்கு முத்துவும் ஆமா எல்லாரும் அப்படித்தான் சொன்னாங்க என பேசுகிறார்.

உடனே முத்து இந்த சட்டையை எங்கே எடுத்தீங்க அத்தா என கேட்க  சந்திரா நான் எடுக்கல சத்யா தான் உங்களுக்காக வாங்கிக் கொண்டு வந்தான் எனக் கூறுகிறார் உடனே முத்துவின் முகம் மாறுகிறது முத்து எழுந்து நின்று இந்த சட்டையா அவன் எந்த காசுல வாங்கி இருப்பான்னு எனக்கு தெரியும் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் இத ஏன் முன்னாடியே சொல்லல அவன் தான் வாங்கி கொடுத்தான் என்று என கேட்க மீனாவுக்கே தெரியாது என சந்தரா கூறுகிறார்.

அந்த சமயத்தில் சத்யா வருகிறார் சத்தியா இப்ப நான் வாங்கி கொடுத்த சட்டையை போடுவதில் இவருக்கு என்ன கௌரவ கொறச்சல் எனக் கேட்கிறார் அதற்கு முத்து கோவப்பட்டு ஆமாண்டா எனக்கு கவுரவ கொறச்சல் தான் என சட்டையை கழட்டி எறிந்து விட்டு கீழே செல்கிறார் கீழே சென்று மீனாவை வரியா இல்லையா என கேட்க மீனாவும் காரில் சென்று கிளம்பி விடுகிறார் போகும் வழியில் ஒரு கடையில் சென்று சட்டையை வாங்கிக் கொண்டு போட்டுப் போகிறார்கள்.

வீட்டிற்கு சென்றவுடன் சட்டை மாறி உள்ளதை அனைவரும் பார்க்கிறார்கள் ஏதோ நடந்திருக்கு என விஜயா நினைக்கிறார் அதேபோல் மற்றவர்களும் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மீனா முத்து இருவரும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதால் இன்று விஜயா தான் சமைத்துள்ளார் அப்பொழுது மனோஜ் என்னம்மா உனக்கு ரொம்ப வேர்க்குது என கேட்க அதான் அந்த மீனா அவுங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாலே அதனால இன்னைக்கு உங்க பாட்டி என்ன வச்சி செஞ்சிட்டாங்க என கூறுகிறார் உடனே ரோகிணியை கூப்பிட வேண்டியதுதானே ஹெல்ப்புக்கு என பேச ரோகிணி மனோஜை முறைக்கிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..