சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய திருமண நாள் என்பதை மறந்து விடுகிறார் அதனால் மீனா கோபப்படுகிறார் ஒரு வழியாக மீனாவை சமாதானப்படுத்துகிறார் முத்து இந்த நேரத்தில் மீனாவின் அம்மா மீனாவுக்கு திருமண நாள் என்பதால் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வந்துள்ளார் அதனை விஜயா என்ன ஒரு 50 பவுன் நகை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களா என அசிங்கப்படுத்துகிறார் விஜயா.
மேலும் மீனாவின் அம்மா ரோகிணியின் அப்பா ஜெயிலில் இருப்பதை சொல்லி ஒரு கோவிலுக்கு சென்று வர சொல்கிறார் அதனால் விஜயா மற்றும்ரோகினி சென்று மீனா விடம் உங்க அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா எனக்கெல்லாம் அட்வைஸ் பண்ண வந்துட்டாங்க என அசிங்கப்படுத்துகிறார். இதனையில் முத்து திருமண நாளை கொண்டாடும் விதமாக ஒரு மோதிரத்தை வாங்கி வந்துள்ளார் அதனை விஜயா மற்றும் அண்ணாமலையை அழைத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு போடலாம் என முடிவு செய்துள்ளார்.
அந்த சமயத்தில் முத்துவின் பாட்டி வர அந்த பாட்டியை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார். இதனால் தான் உன்கிட்ட வரவே பயமாயிருக்கு என பாட்டி பேசுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்து மீனாவிற்காக ஒரு மோதிரம் வாங்கியுள்ளேன் என தன்னுடைய திருமண நாளை கொண்டாடும் விதமாக மோதிரத்தை கையில் அணிந்து வருகிறார்.
இந்த நேரத்தில் சிட்டியை வெயிலில் எடுத்து சத்தியா அவருக்கு மாலை போடுகிறார் அப்பொழுது சிட்டி சத்யாவை வைத்து பூகம்பத்தை ஏற்படுத்த உங்க அக்கா திருமண நாள் இங்கேயே வந்த அங்க சென்று வேணுங்குறதை செய்ய என பணத்தை கையில் வைத்து அனுப்புகிறார் சத்யா அங்கு சென்றால் பயங்கர பிரச்சனை வரும் அதுதான் எனக்கு வேண்டும் என சிட்டி சக நண்பர்களிடம் கூறுகிறார்.
சத்யாவும் திருமண நாள் கொண்டாடும் நேரத்தில் உள்ளே செல்கிறார் இவரைப் பார்த்த முத்து கையை முறுக்கிக் கொண்டு வெளியே வருகிறார் இதனால் மீனா பயந்து போய் நிற்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.