அடுத்த அணுகுண்டை வீசிய அண்ணாமலை.. சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணும் ரோகினி..

siragadikka aasai march 30
siragadikka aasai march 30

siragadikka aasai march 30 : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்து எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக குடித்ததால் போலீசை தரக்குறைவாக பேசுகிறார் இதனால் போலீஸ்காரர்கள் சட்டையை கழட்டி விட்டு உட்கார வைக்கிறார்கள்.

பிறகு அண்ணாமலை மற்றும் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து மனோஜை எதற்கு இப்படி உட்கார வைத்துள்ளீர்கள் என கேட்க அதற்கு போலீசையே தரகுறைவாக பேசினால் கொஞ்சவா செய்வாங்க என பேசுகிறார்கள். ஒரு வழியாக அண்ணாமலை போலீஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மனோஜை அழைத்து செல்கிறார்.

தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அண்ணாமலை தன்னுடைய அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் நடந்த அனைத்தையும் அம்மாவிடம் கூறுகிறார். உடனே மனோஜிடம் பாட்டி உன்னுடைய மனைவி ரோகினியை வரச் சொல்லி எனக்கு கூறுகிறார்.

மனோஜம் ரோகிணியை அழைக்கிறார் அதேபோல் அண்ணாமலை விஜயாவை அழைக்கிறார் அதற்கு விஜயா நாங்க வந்து ரோகிணியை என்ன வேணாலும் திட்டுவேன் அதை உங்க அம்மா கேட்க கூடாது அப்படின்னு தான் வருகிறேன் என கூறுகிறார்.

ரோகிணி வந்தவுடன் பாட்டி சூடத்தை ஏற்றி கொடுத்து சத்தியம் செய்ய சொல்கிறார் அப்பொழுது அண்ணாமலை இது மட்டும் தான் மறைச்சு இருக்கியா இன்னும் எதாவது மறைச்சு இருக்கியா என ரோகிணியை பார்த்து கேட்கிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் ஒருவேளை உண்மையை கூறுவாரா இல்லை மறுபடியும் பொய் பித்தலாட்டம் தான் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.