முத்துவுக்கு விழுந்த பெரும் அடி.. 500 மாலை கடத்திய ரவுடியை கண்டுபிடிப்பாரா.. முத்துவை கொன்னுடுவேன் என மிரட்டும் அரசியல்வாதி..

siragadikka aasai march 13
siragadikka aasai march 13

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் 500 மாலையைக் கட்டிக் கொண்டிருக்கிறார் மீனா அப்பொழுது அனைவரும் தூங்கி விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் முத்துவும் தூங்கி எழுந்து இன்னும் கட்டி முடிக்கலையா எனக் கேட்க இன்னும் கொஞ்சமாக கட்டிவிட்டு தூங்குகிறேன் என மீனா கூறுகிறார் உடனே முத்து மீனாவுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வருகிறார். டீ நல்லா இருக்கிறதா என முத்து கேட்ட மீனா சூப்பராக இருக்கிறது என கூறுகிறார் நான் சக்கரை போட மறந்துட்டேன் என கூற உங்க அக்கறைக்கு சக்கர இல்லனாலும் நல்லா இருக்கு என பேசுகிறார்.

அடுத்த நாள் காலையில் வண்டியில் மாலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இரண்டு ரவுடிகள் நோட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் டிரைவர் 24 மணி நேரமும் போன் பேசும் ஆள் அதனால் ஃபோன் பேசிக் கொண்டிருக்கிறார் மாலையை ஏற்றிவிட்டு முத்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார் அந்த சமயத்தில் டிரைவரை திட்டி ஒழுங்கா மாலையை போய் இறக்கி விடு இல்லன்னா அவ்வளவுதான் என முத்து கூறுகிறார்.

மாலை வராததால் முத்துவை மிரட்டும் கட்சித் தலைவர்.. ஆட்டோவில் சென்று மாலை கடத்தியவரை துரத்தி பிடித்து முத்து… பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

அடுத்த காட்சியில் அரசியல்வாதி அனைத்தும் ரெடியா என பேசிக்கொண்டிருக்கும் பொழுது மாலை மட்டும் வரவில்லை என கூறுகிறார் உடனே தன்னுடைய கட்சிக்காரரை கூப்பிட்டு மாலை வரவில்லை என்றால் உனக்கு மாலை போட்டு விடுவேன் என மிரட்டுகிறார். அதற்குள் டிரைவர் வண்டியை எடுத்துச் செல்லும்பொழுது வண்டி பஞ்சர் எனக்கூறி வண்டியை கடந்தி விடுகிறார்கள் ரவுடி.

வண்டி கடத்தியதை சிட்டியிடம் கூறுகிறார்கள் அந்த சமயத்தில் அரசியல்வாதி நண்பன் முத்துவுக்கு போன் பண்ணி வண்டி இன்னும் வரவில்லை என கூறுகிறார் உடனே முத்து டிரைவருக்கு கால் பண்ணி என்ன ஆச்சு எங்கடா இருக்க என கேட்க வண்டியை கடத்தி விட்டாங்க என பேசுகிறார் உடனே முத்து நடந்த சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரிடம் விசாரிக்கிறார் அது மட்டும் இல்லாமல் கடத்தி இருபது நிமிஷம் தான் ஆகிறது எனக் கூறியவுடன் சிட்டிக்குள்ள தான் வண்டி இருக்கும் அப்ப கண்டுபிடிச்சிடலாம்  என்ன தேடுகிறார்.

மாலை வராததால் முத்துவை மிரட்டும் கட்சித் தலைவர்.. ஆட்டோவில் சென்று மாலை கடத்தியவரை துரத்தி பிடித்து முத்து… பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

அப்பொழுது அரசியல்வாதி போன் பண்ணி வண்டி இன்னும் அரை மணி நேரத்துல இங்க வரணும் இல்லன்னா உன் நண்பனுக்கு ஒரு மாலை உனக்கு ஒரு மாலை போட்டு விடுவேன் என மிரட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது