சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் தங்கை சீதாவிற்கு டிராபிக் கான்ஸ்டபிள் அருணுக்கும் காதல் மலர்ந்து விட்டது ஒரு வழியாக இருவரும் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். மற்றொரு பக்கம் அருணுக்கும் முத்துவுக்கும் மிகப்பெரிய வார் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் சீதா கண்டிப்பாக முத்து சொன்னால் தான் கல்யாணம் செய்து கொள்வார் என தெரியப் போகிறது.
அதன் பிறகு அருணுக்கு சீதா மீது வெறுப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் முத்து கடையிலிருந்து சாப்பாடு வாங்கி வந்து மீனாவுக்கு ஊட்டி விடுகிறார் ஊட்டி விட்டு ஆறுதலாக பேசுகிறார். மீனா இந்த குடும்பத்தில் வீட்டு வேலைக்காரியாக மட்டுமல்லாமல் வீட்டை கூட்டுக் குடும்பமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ரோகிணி கோபித்துக் கொண்டு வித்யா வீட்டிற்கு சென்றுவிட்டார். அதேபோல் விஜயா சண்டை போட்டுவிட்டு பார்வதி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த சமயத்தில் மீனா மாமா அந்த கறிக்கடை பாயை கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கக் கூடாது எனக் கூறுகிறார் அதற்கு முத்து அப்படின்னா ரோகினி பொய் சொல்லிக்கிட்டே இருக்கணும் நாம ஏமாந்துகிட்டே இருக்கணுமா என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் முத்து மீண்டும் பார்லர் அம்மா மீது எனக்கு இன்னும் சந்தேகம் குறையவில்லை அது ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறது என பேசுகிறார்.
அதற்கு மீனா அது எதுவா இருந்தாலும் பரவாயில்லை நாம இனிமே இதுல தலையிடக்கூடாது என பேச முத்து இப்பதான் வீட்ல யாருமே இல்லையே நம்ம வீட்டு செக் பண்ணிடலாம் என பேசுகிறார் அப்பொழுது மீனாவுக்கு சின்ன குழந்தையின்டை கிடைக்கிறது இதை பார்த்த மீனா இது க்ரிஷ் வயதுள்ள பையனுடையது என பேசுகிறார். உடனே முத்து க்ரிஷ் மனோஜெட பையன நீ சொல்றியா என கேட்க என்னன்னு தெரியல ஆனா ஏதோ சந்தேகம் இருக்கிறது என பேசுகிறார்.
அதேபோல் வீட்டில் பிரச்சனை நடைபெறுவதால் ரவி மற்றும் சுருதி இருவரும் ரிசாட்டில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வருகிறார்கள். அதேபோல் ரோகினி ஸ்ருதிக்கு கால் செய்து பேசுகிறார் அப்பொழுது பொய் சொன்னதற்கு ஒரு காரணம் இருப்பது போல் பேச அதற்கு ஸ்ருதி கமெண்ட் செய்கிறார். மற்றொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரும் பொழுது முத்து மற்றும் மீனா இருவரும் குழுமிய விட்டு வெளியே வருகிறார்கள் அப்பொழுது மீனா மற்றும் முத்து இருவரும் மனோஜ் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆள் இல்லாத நேரத்தில் என்னை பற்றி பேசுவதை தவிர்த்து விடுங்கள் என பேசுகிறார்.
மற்றொரு பக்கம் சுருதி ரோகினி இடம் பாட்டி வருகிறார் உங்கள் பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் வரப்போகிறது என பேச அதற்கு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.