சத்யாவுடன் ஒயின் ஷாப்புக்கு சென்ற மீனா.. பொண்டாட்டியுடன் ஈகோ பார்க்கும் முத்து.

siragadikka aasai meena muthu
siragadikka aasai meena muthu

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை எங்கு தேடியும் காணவில்லை முத்து வராததால் மீனா பதட்டத்துடன் இருக்கிறார் அப்பொழுது சத்யாவை அழைத்து மீனா மற்றும் சத்யா இருவரும் தேடுகிறார்கள் எங்கு தேடியும் முத்து கிடைக்கவில்லை. ஒருவேளை குடிக்க போய் இருக்கலாம் என சத்தியா ஒயின்ஷாப் இருக்கு மீனாவை அழைத்து செல்கிறார்.

அங்கு மீனாவை குடிக்க வந்திருக்கியா வா நான் வாங்கி தருகிறேன் என ஒருவர் வம்பு இழுக்கிறார் அதேபோல் சத்யா உள்ளே சென்று தேட அங்கு முத்து கிடையாது. ஆனால் சிட்டியின் தோழர்கள் இருக்கும்  அந்த இடத்தில் சத்திய போக அவரிடம் வம்பு இழுக்கிறார்கள். ஒரு வழியாக அதனை சமாளித்து விட்டு வெளியே வருகிறார் சத்தியா அதற்குள் மீனாவிடம் ஒரு வயதானவர் அக்கா 20 ரூபாய் இருந்தால் கொடுங்க ஒரு கட்டிங் போடலாம் என  கேட்கிறார்.

அப்பொழுது ஒருவர் மீனாவிடம் வந்து இங்கே ஏமா வந்த இவன மாதிரி ஆளுங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க 20 20 சேர்த்து ஒரு குவாட்டர் அடிப்பாங்க என கூறுகிறான். சத்யா வெளியே வந்து இங்கு மாமா இல்லை என்றவுடன்  வீட்டிற்கு செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அண்ணாமலை இடம் மீனா கேட்கிறார் அண்ணாமலை எனக்கு தெரியாது உன்கிட்ட சொல்லலையா என கேட்க என்கிட்ட சொல்லல என கூறுகிறார்.

உடனே சத்யா வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூற மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் செய்து பேசுகிறார் இன்னும் வரவில்லையா என கேட்கிறார் அப்பொழுது அனைவரும் ஆறுதலாக பேசுகிறார்கள் அந்த சமயத்தில் முத்து வருகிறார் எங்கே போனாய் என அண்ணாமலை சண்டை போடுகிறார். உன்னையே நினைச்சுகிட்டு மீனா இந்நேரம் அழுதிருப்பா சொல்லிட்டு போக மாட்டியா என பேசுகிறார்.அண்ணாமலை உள்ளே சென்றவுடன்..

உடனே திருச்சிக்குப் போன சவாரி காசு 8500 இந்த என கூறுகிறார். உன்ன விட என்னால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதை காட்டிவிட்டேன் என பேரும் மூச்சு விட மீனா கண்கலங்கி எழுகிறார் நமக்கு புடிச்சவங்க கிட்ட எப்படி வேணாலும் பேசலாம் என நினைத்து நானும் பேசி விட்டேன்  அதை தப்பு என்று நிரூபித்து விட்டீர்கள் பேசும்பொழுது கூட பார்த்து பேச வேண்டும் என சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் என மீனா கண்ணீருடன் பேச சரி வாங்க சாப்பிடலாம் என கூப்பிடுகிறார் அதற்கு முத்து நான் சாப்பிட்டு விட்டேன் என கூறுகிறார்.

நான் இன்னும் சாப்பிடல அது உங்களுக்கு தெரியாதா என கேட்க ஒரு நாள் சாப்பிடாம இருந்தா என்ன ஆகிடும் செத்தா போயிடுவேன் என மீனா சாப்பிடாமல் படுத்து கொள்கிறார். உடனே முத்து சாப்பாடு எடுத்து வந்து மீனாவுக்கு ஊட்டி விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.