சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவிக்கு போன் பண்ணி சுருதி வீட்டுக்கு போய்ட்டாள் என்பதை கூறுகிறார். அதற்கு ரவி நான் அழைத்து வருகிறேன் என கூற அதெல்லாம் நீ போகக்கூடாது அவ தான போனா அதனால நீ எதுக்கு போய் அழைத்துகிட்டு வரணும் உனக்கு என்ன அவ மரியாதை கொடுக்கமாட்டா என்பது போல் பேசுகிறார் இதனால் ரவி யோசிக்கிறார்.
மீனா என்ன இப்படி அத்தை சொல்லிட்டாங்க அவங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா நல்லது தானே ஆனா அத்தை இப்படி சொன்னாங்கன்னா எப்படி சுருதி வருவாங்க என பேசுகிறார். உடனே அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும் என முத்து கூறுகிறார். உள்ளே சென்று மீனா போனை எடுத்து ரவிக்கு போன் செய்து நீங்க பண்ணது தப்பு ரவி நீங்க அவளுக்கு உடம்பு சரியில்லாத அப்ப அவ கூட இருந்து பாத்துக்கணும் நினைக்கிறதுல என்ன தப்பு.
நீங்க போயி சுருதிய கூட்டிட்டு வாங்க என கூறுகிறார் உடனே ரவியும் ஓகே சொல்லி விடுகிறார். மற்றொரு காட்சியில் மீனாவின் சித்தி அண்ணன் அனைவரும் வந்துள்ளார்கள். அப்பொழுது அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையை வைத்துவிட்டு சாப்பிட சொல்லுகிறார் மீனா. அதற்கு முதலில் மறுத்தவர்கள் பிறகு சாப்பிட உட்காருகிறார்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜயா வருகிறார் இவர்கள் எல்லாம் யார் என கேட்க மீனா தன்னுடைய உறவினர்கள் எனக் கூறுகிறார் சாப்பிட தான் வந்தாங்களா எதுக்காக இப்படி சாப்பிட்டுட்டு இருக்காங்க அரிசி பருப்பு எல்லாம் தீர்வதற்கு காரணம் நீதானா என திட்டுகிறார். மீனா எவ்வளவு கெஞ்சியும் விஜயா கேட்கவில்லை திட்டிக் கொண்டே இருக்கிறார் இதனால் மீனாவின் உறவினர்கள் சாப்பாட்டில் இருந்து எழுந்து நீ சந்தோஷமா இருக்கன்னு சொன்ன மீனா அந்த சந்தோஷத்தை இப்ப பார்த்துட்டோம் என கூறிவிட்டு கிளம்புகிறார்கள்.
அடுத்த காட்சியில் மீனா இங்கு நடந்ததை தன்னுடைய தோழிகளிடம் கூறுகிறார் உடனே அவர்கள் தன்னுடைய மாமியாரும் இப்படித்தான் செய்தார். அவருக்கு நான் சூடு போட்டு விட்டேன் என ஒரு தோழி கூறுகிறார் அதே போல் மற்றொருவர் என் மாமியார் இப்படித்தான் செஞ்சாங்க காரத்தை அள்ளி கொட்டி வைத்தேன் வைத்ததால போக வைத்தேன் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட மீனா அதிர்ச்சியாகி என்ன இப்படி செஞ்சிட்டீங்க வயசானவங்க கூட என்று தெரியாதா என பேசுகிறார்.
உடனே மீனா வீட்டிற்கு செல்கிறார் அங்கு மனோஜ் தூம்பிக்கொண்டே இருக்க விஜயா மீனாவை பார்த்து நண்டு வாங்கி வந்து சூப்பு வைத்து தா எனக் கூறுகிறார் உங்க புள்ளைக்குன்னு தனியான செய்ய மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அது ஞாபகம் இல்லையா? என்பது போல் பேசுகிறார்.
அதற்கு விஜயா நான் சொல்றத தான் நீ செய்யணும் ஒழுங்கா வாங்கி கொண்டு வந்து தூக்கம் வைத்துக் கொடு எனக்கு ஒரு கிராம் மீனா முடியாது என மறுக்கிறார் உடனே மனோஜ் என்ன அம்மா இவ்வளவு சொல்றாங்க அவங்களே எதிர்த்து பேசுற என மீனாவை தரகுறைவாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா கோபப்பட்டு உள்ளே சென்று பெல்ட் கையில் எடுக்கிறார். ஒருவேளை விஜயா மற்றும் மனோஜை பெல்டால் அடிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.