சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் டிசார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்ல இருக்கிறார் அப்பொழுது முத்து நானே பஸ் ஸ்டாண்டில் டிராப் பண்ணுகிறேன் என அழைத்து செல்கிறார் உங்களுக்கு எதற்கு சிரமம் நான் போய்க் கொள்கிறேன் என ரோகிணியின் அம்மா கூற அதுல என்ன போற வழி தானே வாங்க என அழைத்து செல்கிறார்கள் அப்பொழுது கிரிஷ் ரோகினிக்கு டாட்டா காட்டுகிறார்.
அடுத்த காட்சியில் காலையில் மீனா வேலை செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது அண்ணாமலைக்கு கஞ்சி ஊத்தி கொடுக்கிறார் எனக்கும் கஞ்சியை கொடு என முத்து கேட்க உங்களுக்கு கஞ்சி நான் செய்யல தோசை இருக்கு தோசை ஊத்தி தருகிறேன் என்று கூறுகிறார். அதேபோல் மனோஜ் மற்றும் ரோகினி பேசிக்கொண்டு டைனிங் டேபிளில் உட்காருகிறார்கள் அப்பொழுது இன்னைக்கு நீ கடையை பாத்துக்கோ நான் முக்கியமான கிளைண்ட் மீட்டிங் போகிறேன் என பேசுகிறார் மனோஜ்.
அப்பொழுது ரோகிணி எனக்கு வேலை இருக்கு பார்லரை யார் பார்த்துப்பாங்க என பேசுகிறார். அதற்கு விஜய நான் பார்த்துக் கொள்கிறேன் என பேச உடனே அதிர்ச்சி அடைந்து இல்ல எனக்கு அங்க பெருசா வேலை இல்ல நானே பார்த்துக்கொள்கிறேன் என சமாளிக்கிறார். இப்படி பேசிக் கொண்டே இருக்கும் பொழுது முத்துவின் நண்பன் வருகிறார் அப்பொழுது முத்துவை அழைக்க முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணனுக்கு கல்யாணம் என இன்விடேஷன் கொடுக்கிறார்.
உங்க அண்ணன் ஏற்கனவே இன்னொரு பொண்ண லவ் பண்ணானே என பேச அது பிரேக்கப் ஆகிவிட்டது எனக் கூறுகிறார் அது மட்டுமில்லாமல் வீட்டில் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பேசுகிறார் அதற்கு முத்து டேய் கல்யாணம் நடக்கும் போது நீ இருக்காத நீ ஒழுங்கா ஓடிடு இல்லன்னா உன் தலையில கட்டி வச்சிருவாங்க அதுக்கப்புறம் உன் வாழ்க்கை அவ்வளவுதான் என பேசுகிறார்கள்.
இது மீனாவை அசிங்க படுத்துவது போல் தெரிகிறது முத்து அவருடைய நண்பர் இருவரும் வெளியே போன பிறகு விஜயா அவன் இப்ப மனோஜா அசிங்கப்படுத்தல அவன் பொண்டாட்டிய தான் அசிங்கப்படுத்துறன் ஒரு வருஷம் நல்லா வாழ்ந்தன பாராட்டு விழா வச்சாங்க ஆனா இவங்க வாழ்ந்த லட்சணம் இவ்வளவுதான் இவளா அவன் தலையில் கட்டி வச்சுட்டாங்களாம் அதனால அவன் வாழ்க்கை வீணா போயிடுச்சா இதுதான் உண்மை என விஜயா கூறுகிறார் இதனால் மீனா யோசிக்க ஆரம்பிக்கிறாரர்.
உடனே முத்து வந்து சாப்பாடு ரெடியா என கேட்க இன்னும் ரெடியாகவில்லை எனக் கூறுகிறார் இப்படி எதிர்த்து பேச அடுத்ததாக ரோகிணி சாப்பாடு ரெடியா என கேட்க சாப்பாடு ரெடி செய்யவில்லை என கூறுகிறார் உடனே சமைக்க முடியாதுன்னு முன்னாடியே சொல்லி இருந்தா வெளியில சாப்பிட்டு கிளம்பி இருப்போம் அல்ல என மனோஜ் பேசுகிறார் மேலும் ரவியும் சுருதியும் சாப்பாடு ரெடியா என கேட்க சாப்பாடு செய்யவில்லை எனக் கூறி விடுகிறார் மீனா.
ஆனால் மீனாவின் மனதை புரிந்து கொண்டு ரவி அவங்க ஏதும் மூட் அவுட்டில் இருக்காங்க இன்னைக்கு வெயில்ல சாப்பிட்டுக் கொள்ளலாம் என பேசி விட்டு கிளம்புகிறார்கள். அப்பொழுது முத்து மீனா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்துக்கிற என கேட்க அதற்கு மீனா உங்க தலையில என்ன கட்டி வச்சி உங்க வாழ்க்கையை வீணாக்கிட்டாங்க என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் உங்கள் பிரண்டு கிட்ட நீங்க பேசுனது கரெக்டா எனக்கு கேட்கிறார்.
நான் என்ன பேசினேன் என கேட்க உங்க தலையில என்னை கட்டி வைத்ததால் தான் உங்க வாழ்க்கையே வீணாச்சா என பேசுகிறார் அப்படி நீங்க பேசினீங்களே என மீனா கேட்க அதற்கு நான் சும்மா மனோஜை கிண்டல் பண்றதுக்காக சொன்னேன் என சமாளிக்கிறார் ஆனாலும் மீனா விடுவது போல் தெரியவில்லை முத்து மீது இன்னும் கோபத்துடன் கத்துகிறார்.
உடனே முத்து எனக்கு சாப்பாடு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என சவாரி கிளம்புகிறார் அந்த சமயத்தில் மீனாவின் அம்மா கால் பண்ணி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க மீனா கோபத்துடன் போனை வைக்கிறார் அதற்கு மீனாவின் அம்மா தன்னுடைய இன்னொரு மகளிடம் மீனா கோபமாக இருக்கிறாள் ஏதோ பிரச்சனை என பேசிக் கொண்டிருக்க சத்தியா அந்த ஆள்தான் பிரச்சனை செய்திருக்கும் அவர் தான் குடிச்சிட்டு ஏதாவது பிரச்சனை பண்ணி இருப்பாரு என முத்து மீது பழியை போடுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளைய எபிசோடு மீனா எங்கேயோ போய்விட்டார் அவரை போன் பண்ணி முத்து அழைக்க போன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது இதனால் பதட்டத்தில் இருக்கிறார்கள் அனைவரும்.