சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கிரிஷை பார்க்க வருகிறார் அப்பொழுது கிருஷ் வாம்மா வந்துட்டீங்களா என பேசுகிறார் உடனே சத்தமா பேசாத பொறுமையா பேசு என இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இன்னைக்கு கட்ட பிடிச்சுருவாங்க நீ எல்லாரையும் பார்க்கலாம் என பேச அதற்கு கிரிஷ் நான் கட்டு பிரிக்கும் பொழுது உங்களை தான் முதல்ல பாக்கணும் நீங்க வருவீங்களா என பேசுகிறார் கண்டிப்பா வருவேன் என ரோகிணி கூறிவிடுகிறார்.
சும்மா வெறுமனே சொல்லாதம்மா வர முடிஞ்சா வா இல்லன்னா விட்டுடு அவனுக்கு நம்பிக்கை மட்டும் தராதா என ரோகினியின் அம்மா பேசுகிறார்.. அடுத்த காட்சியில் ரோகிணியின் அம்மா கிளம்பி விட்டு போயிட்டு வரேன் என விஜயாவிடம் கூறுகிறார். போங்க ஆனா இனிமே திரும்பவும் வராதீங்க என விஜயா மூஞ்சியில் அடித்தது போல் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் ரோகினிடம் விஜயா இனிமே நீங்க ரூம்லயே படுத்துக்கலாம் என பேசுகிறார்.
மேலும் மீனா முத்து இருவரும் வர வாங்கம்மா போகலாம் என முத்து ரோகினி அம்மாவை கூப்பிட அப்பொழுது முத்து விடம் மறுபடியும் யாரையாவது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திராத என விஜயா கூறுகிறார் ஆமா இது பெரிய பேலஸ் இதற்கு நான் யாரையாவது அழைச்சிக்கிட்டு வரேன் என முத்து பதிலுக்கு பேசுகிறார் அப்பொழுது விஜயா யாரு பெத்ததோ என்ன பிறப்பு என வார்த்தையை விட்டுவிடுகிறார் அவர் கிரிஷை பார்த்து அப்படி சொன்னதும் ரோகினிக்கு உச்சி மண்டை சூடாகி ஆன்ட்டி என கத்துகிறார்.
நீ ஏமா கத்துற நான் அவங்கள தானே சொன்னேன் என பதிலுக்கு பேச சின்ன குழந்தை என ரோகிணி கூறுகிறார் அப்பவே நீ பக்குவமா பேசி வெளியில் அனுப்பி இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது என விஜயா பதிலுக்கு பேச அதற்கு முத்து நான் கூட எங்க பார்லர் அம்மா நல்லவங்களோன்னு நினைச்சுட்டேன் நீங்க என் அம்மா கூட சேர்ந்துகிட்டு கூட்டு களவாணித்தனம் பண்ணி இருக்கீங்க என முத்து பதிலுக்கு கூறுகிறார்.
உடனே கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து கீழே போகிறார் அப்பொழுது விஜயாவிடம் ரோகிணியின் அம்மா இடம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என கூறிவிட்டு செல்கிறார். இவர்கள் போனதும் மனோஜ் அப்பா போய்ட்டாங்க இதுக்கு மேல நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது ஏசி இருக்கேன்னு இன்னும் ஒரு மாசம் ஓசில தங்கலாம்னு பார்த்திருப்பாங்க என வாய்க்கு வந்தபடி பேச ரோகிணி கோவப்படுகிறார் ஆமா இது பெரிய 100 மாடி கட்டிடம் இதுல வந்து அவங்க தங்கிட்டாங்க என மனோஜை எதிர்த்து பேசுகிறார்.
நான் அவங்கள தானே சொன்னேன் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது அதுக்காக என் குடும்பத்தை அசிங்கப்படுத்தற என மனோஜ் பதிலுக்கு கேட்க ரோகிணி கண் கலங்குகிறது ஏற்கனவே தன்னுடைய மகனை விஜயா திட்டும் பொழுது கண் கலங்கினார் ரோகினி அப்பொழுது கண்ணில் தூசி விழுந்ததாக கூறி சமாளித்தார் அதேபோல் தற்பொழுதும் தூசி விழுந்தது போல் ஆக்ஷன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஹாஸ்பிடலுக்கு சென்ற க்ரிஷ் கட்டை பிரிக்கலாமா என டாக்டர் கேட்கும் பொழுது பிரிக்கலாம் என கூறுகிறார் அப்பொழுது காட்டைப் பிரித்தவுடன் கண்ணை திறந்து பார்க்கிறார் க்ரிஷ் அங்கு ரோகிணி இருக்கிறார் உடனே ரோகினி கிரிஷ்டம் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் அப்பொழுது அங்கு வந்த மீனா ரோகினியை பார்த்து அதிர்ச்சடைகிறார் அது மட்டும் இல்லாமல் ரோகினி இடம் என்ன ரோகினி இங்க வந்திருக்க என பேசுகிறார் பேகை மறந்து வைத்துவிட்டு வந்து விட்டார்கள் அதனை கொடுக்க வந்தேன் என சமாளிக்கிறார்.
மேலும் கிரிஷ்டம் ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே என கேட்க அதற்கு சும்மாதான் பேசிக் கொண்டே இருந்தேன் என பேசுகிறார். உடனே முத்து ரெண்டு நாள் பழகுனத்துக்கு உங்க கூட ரொம்ப ஒட்டிக்கிட்டான் ஆனா நீங்க அம்மாகூட சேர்ந்துகிட்டு சதி திட்டம் போட்டது அவனுக்கு தெரியுமா அவனுக்கு விவரம் தெரிஞ்சா தாங்கிப்பானா முழு பாசம் உங்க மேல வச்ச அவன ஏமாத்திட்டீங்க என முத்து பேசுகிறார். மேலும் பில் கட்டுவதற்கு சீட்டை கொண்டு கொடுக்க நானே கட்டிவிட்டு வருகிறேன் என முத்து மீனா இருவரும் கிளம்புகிறார்கள் அப்பொழுது கிருஷ்டம் மீண்டும் ரோகிணி கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.