சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா, கிருஷ் மற்றும் அவருடைய பாட்டியிடம் நீங்க பாவம் எப்படி தனியா பார்த்துப்பீங்க அங்க அத்தைக்கு கால் பண்ணுங்க நான் பேசுறேன் என பேசிக்கொண்டு இருக்க பின்னாடி ரோகினி முழித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கால் பண்ண வேண்டாம் என தன்னுடைய அம்மாவிடம் சைகை காட்டுகிறார்.
ஆனாலும் மீனா விடுவது போல் பேசிக் தெரியவில்லை நீங்க போன் போடுங்க நான் பேசுறேன் எனப் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சுருதி மற்றும் ரவி வருகிறார்கள் கிருஷ் எப்படி இருக்கான் என பேசிவிட்டு இருக்கிறார் அப்பொழுது ரவி உள்ளே போகும்பொழுது ரோகிணி பாலை தட்டி விடுவதை பார்த்து விடுகிறார். மீனா இதற்கு மேல் பேசக்கூடாது என்பதற்காக தான் பாலை ரோகிணி தட்டிவிட்டுள்ளார்.
உடனே மீனா நான் கிளீன் செய்து கொள்கிறேன் என கிளீன் செய்து கொண்டிருக்கிறார். சுருதி உள்ளே வர சுருதி இடம் ரோகிணி அண்ணிக்கு அந்த குழந்தையும் அவங்க பாட்டியும் இருக்கிறது பிடிக்கல என பேசுகிறார் சுருதி ஏன் எனக் கேட்க பாலை வேணும் என்று தட்டி விட்டு இருக்காங்க என பேசுகிறார் ரவி இப்படி சொன்னதும் நான் வேணா போய் கேட்கிறேன் என சுருதி வெளியே சென்று அந்தப் பையனும் பாட்டியும் இருக்கிறது பிடிக்கலையா என நேரடியாக கேட்கிறார்.
ரோகிணி அதெல்லாம் ஒன்னு இல்ல என பேசிக்கொண்டு இருக்கிறார் நான் வேணா போய் பேசுறேன் என சுருதி கூற அதெல்லாம் வேண்டாம் முத்துவும் மீனாவும் அவங்கள அழைத்து கொண்டு வந்தாங்க இப்ப நம்ம வெளியில அனுப்புனா தேவை இல்லாத பிரச்சனை வரும் என பேசுகிறார்கள் மற்றொரு பக்கம் ஊருக்கு போன விஜயா மற்றும் அண்ணாமலை வருகிறார்கள் அண்ணாமலை தன்னுடைய நண்பர் பரசுவை பார்த்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு செல்கிறார்.
விஜயா உள்ளே வந்த பொழுது க்ரிஷ் சேரில் உட்கார்ந்து விளையாண்டு கொண்டிருக்கிறார் அதைப் பார்த்த விஜயா அந்த பையனை திட்டுகிறார் குழந்தை என்று கூட பார்க்காமல் யாரு பெத்ததோ இப்படி வளர்ந்து இருக்கு இந்த பாட்டி வளர்த்தாலே இப்படித்தான் அடுத்தவங்க வீடு எற்றால் எப்படி நடந்துக்கணும்னு கொஞ்சம் கூட மரியாதையே இருக்காது என வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.
அதுமட்டுமில்லாமல் சேரில் இருந்து கிருஷ்ஷை கீழே பிடித்து தள்ளுகிறார் இதனால் ரோகிணி பதற்றம் அடைகிறார் அப்பொழுது கிரிஷ் பாட்டி வந்து பிடித்துக் கொள்கிறார் இதனைப் பார்த்த மீனா என்ன இப்படி நடந்துக்கிறீங்க நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நீ ரொம்ப மோசமா நடந்துக்கிறீங்க பச்ச குழந்தைன்னு கூட பாக்காம இப்படியா நடந்துபிங்க என கேட்கிறார்.
மீனா இவ்வாறு கேட்டது மூஞ்சில் செருப்பால் அடித்தது போல் விஜயாவுக்கு இருக்கிறது உடனே மனோஜ் நீ என்ன அம்மாவை எதிர்த்து பேசுற என பேச முத்து நீ என்ன மீனா கிட்ட கத்தி பேசுற என பதிலுக்கு பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் பாட்டிகிட்ட வளந்தா இப்படித்தான் வளருமாம் குழந்தை என பேசுகிறார் உடனே முத்து அந்த அம்மாவிடம் நீங்க தப்பா நினைக்காதீங்க ஒன்னும் இல்லம்மா நான் என் பாட்டிகிட்ட வளர்த்தேன் அதான் இப்படி சொல்றாங்க என பேசுகிறார்.
இப்படி ஆளாளுக்கு பேச கிரிஷை தூக்கிக் கொண்டு முத்து உள்ளே செல்கிறார் அடுத்த காட்சியில் மனோஜ் நாம எங்க படுகிறது இவங்க இங்கதான் தங்குவாங்க போல என பேசிக்கொண்டு இருக்க ரோகிணி கோவப்பட்டு ஏன் உன்னால வெளிய தூங்க முடியாதா என கத்திவிடுகிறார் இதனை பார்த்த மீனா அதிர்ச்சடைகிறார் பிறகு மீனா மற்றும் முத்து இருவரும் பேச ரோகிணிக்கு குழந்தை ஆசை வந்துவிட்டது குழந்தை பெத்துக்கணும்னு நினைக்கிறாங்க என இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் மனோஜம் குழந்தை பெத்துக்கலாம் என கூற முன்னாடி மட்டும் பயந்து இப்பொழுது என்னவாம் என பதிலுக்கு ரோகினி கேள்வி எழுப்புகிறார் அப்போ சம்பாதிக்கல இப்பதான் நான் பிசினஸ்மேன் ஆகிட்டேனே என பேசுகிறார் இத்து் எபிசோட முடிகிறது.