சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா பிரவுன் மணி இடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நீ இங்கு எதற்கு வந்தாய் என கேட்க இளம் ஆடாக வெட்டினேன் அதனால் கொத்துக்கறி கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன் என கூறுகிறார் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த நானே உன்னை கொத்துக்கறி போட்டு விடுவேன் என வித்யா பிரவுன் மணியை மிரட்டுகிறார்.
அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் படம் என்ன ஆனது என கேட்க இன்னும் கொஞ்ச நேரம் நின்னா உனக்கு இங்க சான்ஸ் கிடையாது என பேச உள்ளே இருக்கும் மீனா இது ரோகிணியின் மாமா குரலாச்சே என சந்தேகப்பட்டு வெளியே வருகிறார் அதற்குள் பிரவுன் மணி வெளியே போகிறார் உடனே ரோகினி உங்களுக்காக தான் கறி வாங்கிட்டு வர சொன்னேன் நீங்க இப்ப போகக்கூடாது வாங்க நான் சமைச்சு தரேன் சாப்பிட்டு போகலாம் என பேசுகிறார்.
மற்றொரு பக்கம் ரோகினி கிருஷ்டம் பேசிக் கொண்டிருக்கும்போது நாம இங்க இருக்கக்கூடாது சீக்கிரம் வாங்க ஹோட்டலுக்கு போய்விடலாம் என பேசுகிறார்கள் முத்து வந்தவுடன் சொல்லிவிட்டு போகலாம் என ரோகினியின் அம்மா கூற அதற்கு அவங்களுக்கு தெரிய கூடாது என்று தான் அவங்களை எல்லாத்தையும் வீட்டை விட்டு அனுப்பினேன் என பேசுகிறார் ரோகிணி.
சரி ஓகே போகலாம் என பேசிக்கொண்டு கிளம்பி கொண்டிருக்கிறார்கள் அதே போல் கிரிஸ், அம்மா நீங்க ஸ்கூலுக்கு வந்து என்னை கிண்டல் பண்ணவங்களை கேக்கணும் நீங்க தான் என் அம்மான்னு சொல்லணும் என பிடிவாதம் பிடிக்க அதற்கு ரோகிணி இப்பொழுது சொல்ல முடியாது நீயே பார்த்துக்கோ என தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நீ என் கூடவே இருக்கலாம் அதுவரைக்கும் நான் தான் அம்மான்னு யாருகிட்டயும் சொல்லக்கூடாது என ரோகிணி கிருஷ்டம் கூறுகிறார்.
அப்பொழுது கிளம்பி விட்டு வெளியே செல்லும் பொழுது முத்து உள்ளே வருகிறார் உடனே ஓடிப் போய் சேரில் உட்கார்ந்து கொள்கிறார்கள் கிருஷ்க்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்துள்ளேன் என முத்து கூற உடனே உள்ளே போயிட்டு வருகிறேன் நீங்கள் சாப்பிடுங்கள் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார் அப்பொழுது ரோகிணி கிருஷுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார் அதனை பார்த்த முத்து அதிர்ச்சடைகிறார்.
இதுக்கு பேர்தான் கல்லுக்குள் ஈரம் என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் இதுல என்ன இருக்கு என ரோகிணியும் பேசுகிறார் இந்த நிலையில் மற்றொரு பக்கம் மீனாவை வித்தியா உட்கார வைத்து சாப்பிட வைக்கிறார் வித்யா அப்பொழுது நீங்க சூப்பரா சமைச்சு இருக்கீங்க என வித்யா மீனாவை பாராட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் இப்படி எல்லாத்துக்கும் சமைச்சு போட்டுட்டு உங்க வேலையும் பாக்கறீங்களே உங்களுக்கு கஷ்டமா இல்லையா என கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது என மீனா கூறுகிறார் உங்களுக்குனு ஏதாவது லட்சியம் இருக்கா என கேட்க எனக்குன்னு என்ன லட்சியம் இருக்கு எனக்கு என் தம்பி, தங்க என் வீட்டுக்காரரு,மாமா, மாமியார் எல்லாம் நல்லா இருக்கணும் என பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் உங்க மாமியார் இப்படி திட்டுறாங்களே உங்களுக்கு கோபமே வராதா என வித்யா கேட்க கோபம் வரும் ஆனா என் வீட்டுக்காரரை நினைச்சா எனக்கு எதுவுமே தோணாது அந்த மாதிரி தங்கமான ஆள பெத்தது அவங்கதானா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ரோகிணியும் ஸ்ருதியும் பெரிய வீட்டு பிள்ளைங்க ஆனால் நான் சாதாரண வீட்டு பெண்தானே அதுல அவங்க வித்தியாசம் காட்டுறாங்க அதுக்கு நாம என்ன பண்ண முடியும் என பேசுகிறார் இதனால் வித்யா கொஞ்ச நேரம் மீனாவுக்காக பரிதாபப்படுகிறார்.
பிறகு மீனா வீட்டுக்கு கிளம்பி வருகிறார் அப்பொழுது கிரிஷ்க்கு கண்ணாடி வாங்கிக் கொண்டு வந்ததை கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் ரோகிணி சாப்பாடு ஊட்டியதை முத்து கூற இதில் என்ன ஆச்சரியம் அவங்களுக்கும் தாய்மை என்றால் என்ன என்று தெரியும் அதனால சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார் அதனால் என்ன பிரச்சனை என மீனா கேட்க அம்மா தாயே ஆள விடு உன் கிட்ட போய் சொன்னேன் பாரு என முத்து கிளம்புகிறார்.
அடுத்த நாள் எபிசோடில் ரோகினிக்கு குழந்தை ஆசை வந்துவிட்டது என முத்து பேச அதனை ஒட்டு கேட்டிருந்த ரோகினி அட பாவிங்களா என பேசுகிறார் அந்த நேரத்தில் மனோஜ் உனக்கும் குழந்தை ஆசை வந்துடுச்சா என சிரித்துக் கொண்டே வர ரோகினி அவரை முறைக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.