கண் திறக்கும் பொழுது அம்மாவை பார்க்கணும் என்று அடம் பிடித்து க்ரிஷ்.. மகனை கொஞ்சும் பொழுது கையும் களவுமாக பிடித்த மீனா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை…

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷ் கண்ணில் அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள் ஆனால் ஒரு வாரம் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதால் ஹாஸ்பிடலில் இருந்து முத்து மற்றும் மீனா வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள் உடனே ரோகினி அவர்களை பார்த்து அதிர்ச்சடைந்தார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அம்மாவிடம் என் வாழ்க்கையை ஏற்கனவே வீணாக்கிட்ட மறுபடியும் வீணாக்குவதற்காக இங்கு வந்தியா என பேசுகிறார்.

ஆனால் ரோகினியின் அம்மா நான் எதுக்கு உன் வாழ்க்கையில் வரப் போறேன் மீனாவும் முத்து வந்து இங்க அழைத்து வந்தாங்க இது உன் பிள்ளை தான் அதாவது உனக்கு தெரியுமா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் மீனா க்ரிஷ் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதனை பார்த்து ரோகிணி பொறமை படுகிறார் அது மட்டும் இல்லாமல் இதனைப் பார்த்து ரோகினியின் அம்மா க்ரிஷ் மேல அவ அக்கறையா இருக்கிறார் என பேச ரோகினிக்கு கோவம் வருகிறது அப்ப எனக்கு அக்கறையே இல்லைன்னு சொல்றியா என கேட்கிறார்.

மேலும் எனக்கு அப்புறம் நீ இந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் தான் விட்டுடுவே கண்கலங்கியபடி கூற என் பையன நான் அப்படி விடமாட்டேன் என ரோகிணி கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரையும் ரோகிணி பிளான் பண்ணி வெளியே போக வைக்கிறார் பிறகு தன்னுடைய மகனை கொஞ்சி விளையாடுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் டாக்டர் கண்ணை பிரிக்கும் பொழுது க்ரிஷ் என்னுடைய அம்மாவை தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆரம்பிக்கிறார்.

கண்ணை பிரிக்கும் பொழுது ரோகினி வந்து முன்னே நிற்கிறார் உடனே இனிமேல் எனக்கு அம்மா இல்லைன்னு யாரும் சொல்ல மாட்டாங்க நான் என் அம்மா நீங்கதான் என்று  சொல்லுவேன் என பேசுகிறார் உடனே ரோகினி கிரிஷை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கிறார் அந்த சமயத்தில் மீனா உள்ளே வருகிறார் அவரைப் பார்த்து ரோகினி அம்மா அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் ரோகிணியும் சுதாரித்துக் கொண்டு எழுந்து நிற்கிறார் மீனா ரோகிணியிடம் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க எனக் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு ரோகிணி முழித்து கொண்டிருக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.