ரோகிணி தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட கிரிஷ்… பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…

siragadikka aasai jun 2
siragadikka aasai jun 2

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் ரோகிணியின் மகன் க்ரிஷ் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் முத்து தூக்கி கொண்டு வீட்டிற்கு வருகிறார் அது மட்டும் இல்லாமல் கண்ணில் அடிபட்டுள்ளதால் கண் திறக்காமல் இருக்கிறார் இந்த நிலையில் மீனா முத்து இருவரும் தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து வருவதால் விஜயா திட்டுகிறார் ஆனாலும் ஒரு வாரம் இருந்துட்டு போகட்டும் என பேசி விடுகிறார் அண்ணாமலை.

இதனால் ரோகிணி தனக்கு பிரச்சனை வரும் என எண்ணிக் கொண்டிருக்கிறார் மகன் என்று கூட பார்க்காமல் இங்கே ஏன் வந்தீங்க என தன்னுடைய அம்மாவை பார்த்து கேட்க ரோகிணியின் அம்மா கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் மீனா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட அதனை பார்த்து ரோகிணி பொறாமைப்பட்டு இவ எதுக்கு கிரிஸ்க்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள் என பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அம்மாவிடம் இவ எதுக்கு கிரிஷ் கூட தூங்குகிறாள் என கேட்க.

க்ரிஷ் மேல அவ பாசமா இருக்கா அக்கறையா இருக்கா என பேசுகிறார் ரோகிணியின் அம்மா அதற்கு ரோகிணி ஏன் எனக்கு எல்லாம் அக்கறை கிடையாதா என பதிலுக்கு பேசுகிறார் எப்படியாவது வீட்டில் உள்ளவர்களை  வெளியே அனுப்ப வேண்டும் என தன்னுடைய தோழி வித்யாவை வைத்து மாஸ்டர் பிளான் போட்டு ஒரு ஒருவராக வெளியே அனுப்பி கொண்டு இருக்கிறார்.

அதேபோல் விஜயாவையும் திருத்தணி கோவிலுக்கு போயிட்டு வர சொல்ல அனைவரும் கிளம்புகிறார் இப்படி ஆளாளுக்கு வெளியே செல்வதால் ரோகிணி தன்னுடைய அம்மா மட்டும் மகனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்  கிரிஷ் வெளியே வரும் பொழுது என் மகன் தெரிஞ்சும் நான் அவன் கிட்ட பாசமா இருக்க முடியல அவனோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல என வருத்தப்படுகிறார் இதனால் க்ரிஷ் கேட்டுக்கிட்டு உள்ளே வருகிறான்.

ரோகினி இடம் நீங்கதான் என்னுடைய அம்மாவா ஆன்ட்டி என கேட்கிறான் உடனே ரோகினி ஆமாம் என கண்ணீர் விட்டு கட்டிபிடித்து கதறி அழுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.