சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வீட்டிற்கு வராததால் அண்ணாமலை பதட்டமாக இருக்கிறார் அப்பொழுது முத்து வர முத்துவிடம் மீனா வந்தாலா என கேட்க அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறுகிறார் உடனே ரவி அந்த நேரத்தில் வர ரவியும் விசாரிக்கிறார் அப்பொழுது யார் சமைப்பது என ஒரு கேள்வி வர விஜயா ரோகினியை அழைத்து நீயே சமசிடு என கூறுகிறார் ரோகிணியும் சமைத்து வருகிறார் சமைத்து முடித்துவிட்டு சாப்பிட அழைக்கிறார்கள்.
அப்பொழுது மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ரோகிணி எவ்வளவு அழகா சூப்பரா செஞ்சிருக்கா என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் தோசைக்கு ரசம் எவ்வளவு சூப்பரா இருக்கு என பேச இது ரசமா இது சாம்பார் என ரோகிணி கூறுகிறார் சாம்பார் இவ்வளவு தண்ணியா இருக்கா என பேசுகிறார் ரவி இப்படி அனைவரும் பேசிக் கொண்டிருக்க அண்ணாமலையை சாப்பிட அழைக்கிறார்கள் ஆனால் அண்ணாமலை முடியாது என மறுக்கிறார் மீனா வரலையே என பேசுகிறார்.
உடனே நாக்கில் நரம்பில்லாமல் அவ இவன புடிக்காம ஓடிப்போயிட்டா என விஜயா பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் இனிமே அவ வருவான்னு எனக்கே தெரியல எனவும் பேசுகிறார் இது லேட்டா நடக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனா இவ்ளோ சீக்கிரம் நடைபெற்றது எனவும் கூறுகிறார். இப்படி ஆளாளுக்கு பேச அண்ணாமலை கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் உனக்கு நாக்குல நரம்பு இல்லாம பேசுறியே உன் மருமகள் தானே இப்படி பேசுவியா என பேசுகிறார்.
அது மட்டும் இல்லாமல் விஜயா இப்படி மீனாவை வாய்க்கு வந்தபடி பேச அண்ணாமலை திட்டுகிறார் உடனே மனோஜ் விஜயாவை அழைத்து சென்று மீனா வெளியே போகும் போது ஏதாவது லெட்டர் எழுதி வைத்திருந்தாரா என கேட்கிறார் அதற்கு இல்லை என கூற அவ எழுதி வச்சிருந்தா உங்க பெயரை எழுதி வைத்திருக்க போறா எதுக்கும் செக் பண்ணுங்க என்பது போல் கூற என் பெயரை எதுக்கு எழுதி வைக்கணும் இல்ல நீங்க கொடுமைப்படுத்துறீங்கன்னு ஏதாவது எழுதி வச்சிருக்கப் போறா என கூறுகிறார்.
அப்புறம் உங்கள காப்பாத்தவே முடியாது எனவும் பேசுகிறார் இதனால் விஜயா அதிர்ச்சடைகிறார் ஆனால் ரோகிணி அவ எதுக்கு இப்படி எழுதி வைக்க போற அவங்க குடும்பத்துல ஏற்கனவே அவங்க அப்பா இப்படித்தான் பண்ணாரு அப்ப இவளும் அப்படித்தான் பண்ணுவா என பேசுகிறார் இதனால் விஜயா வெளியே வந்து கப் சிப் என அமைதியாக இருக்கிறார்.
விஜயா ரோகினி பேசிக் கொண்டிருப்பதை கேட்டுவிட்டு ரவி வா நாம போய் தேடி பார்க்கலாம் என அழைக்கிறார் முத்துவை ஆனால் அந்த சமயத்தில் சீதா கால் செய்து கந்து வட்டிக்காரன் இப்பொழுதுதான் வந்தான் எனக் கூற உடனே அவனை பார்க்கமுத்து கிளம்புகிறார் ரவியை இங்கே இரு என கூறிவிட்டு கிளம்புகிறார். அங்கு சென்று கந்து வட்டி காரனை பார்க்கும் பொழுது அடிபட்டு கிடக்கிறான் உடனே இவன் கடத்திருக்க வாய்ப்பே இல்லை என கூறி விட்டு வெளியே வருகிறார்.
மற்றொரு பக்கம் சத்தியாவிடம் சிட்டி ஏற்றிவிட்டு உங்கள் அக்காவை காணும் முத்துமேல் டவுட்டா இருக்கிறது என கம்ப்ளைன்ட் பண்ணு என கூறுகிறார் சத்யாவும் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் செய்கிறார். அப்பொழுது முத்துவுக்கு அண்ணாமலை போன் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வா நீ மட்டும் தேடினால் எப்படி கிடைப்பா அவங்களும் தேடட்டும் என கூறுகிறார் அண்ணாமலை.
உடனே முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அங்கு கம்பிளைன்ட் செய்யும் நேரத்தில் சத்யாவை பார்க்கிறார்கள் நீ இங்க என்னடா பண்ற என கேட்க உடனே இவர் மேல தான் சந்தேகம் இருப்பதாக சத்தியா கூறுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.