முத்து டென்ஷனாக கார் செட்டுக்கு வருகிறார் அப்பொழுது கார் ஷெட்டில் உள்ள ஒருவர் முத்து விடம் 500 ரூபாய் காசு கேட்கிறார் அதற்கு முத்து இல்லை என கூறுகிறார் சவாரிக்கெல்லாம் போயிட்டு வந்த முத்து குடு முத்து என கேட்க சவாரிக்கு போயிட்டு வந்தா எடுத்து ஒங்கிட்டு குடுத்துடனுமா எனக்கு கோபப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த நபர் என் வீட்டில் பிரச்சனை அதனால்தான் ஏதாவது வாங்கிட்டு போகலாம் என்று நினைத்தேன் என கூறுகிறார்.
உடனே முத்துவின் நண்பன் இந்தா உன் பிரச்சனையை போய் நீ பாரு என கூறுகிறார் உடனே முத்து பொண்டாட்டிக்கு ஏதாவது பிரச்சனை என்றால் வாங்கிக் கொண்டு கொடுத்தால் சரியாகிவிடுமா என கேட்கிறார் அதற்கு கார் செட்டில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள் உடனே முத்துவின் நண்பன் உனக்கு உன் பொண்டாட்டிக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்க ஆமாம் எனக் கூறுகிறார் அப்ப பொண்டாட்டி தப்பு பண்ணா நமக்கு ஏதாவது வாங்கி கொடுப்பாங்களா என கேட்க அப்பவும் நாமதான் வாங்கி கொடுக்கணும் என முத்துவின் நண்பன் கூற இது என்ன போங்காட்டமா இருக்கு எனக்கு கூறுகிறார்.
இப்படியே பேசிக் கொண்டிருக்க முத்துவின் நண்பன் நண்பா வா நீ காலைல சாப்பிடலைன்னு சொன்னல்ல ஒரு நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என அன்னை மெஸ்க்கு அழைத்து செல்கிறார் அங்கு விருந்து உபசரிப்பு அருமையாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் மட்டன் குழம்பு மட்டன் மீன் குழம்பு என அனைத்தும் கட்க ச்பாடு அருமையாக இருப்பதாக முத்து பாராட்டுகிறார் அதற்கு அந்த ஹோட்டல் ஊழியர்கள் சந்தோஷப்படுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இது அனைத்தையும் என் பொண்டாட்டி தான் சமைச்சா எங்க குடும்பமே இதற்கு ஹெல்ப் பண்ணுகிறது. என பேசுகிறார்கள்.
இப்படி சந்தோஷமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்து என் பொண்டாட்டிக்காக ஏதோ ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் இருக்குன்னு சொன்னீங்களே அது ஒரு பார்சல் பண்ணி தர முடியுமா என கேட்கிறார்கள் உடனே ஓகே என சொல்லிவிட்டு அதனை அந்த அம்மா பார்சல் பண்ணி எடுத்துக் கொண்டு வருகிறார்கள் பில் கட்டி விட்டு வீட்டிற்கு செல்கிறார் முத்து. அப்பொழுது மீனா என கூப்பிட மீனா இன்னும் வரவில்லை என பேசுகிறார்கள் உடனே ரவி வர ரவி இடமும் மீனா வரல என கூற பரவாயில்லை உங்களுக்கு ஏதாவது டயர்டா இருக்கும் அதனால ரெஸ்ட் எடுக்கட்டும் நானே சமைக்கிறேன் என ரவி கூற நீ அங்க நாள் ஃபுல்லா அடுப்பில் நின்று விட்டு இங்கேயும் சமைப்பியா என கேட்கிறார்கள்.
அதன் பிறகு மனோஜ் வர இன்னைக்கும் சமையல் இல்லையா என கேள்வி எழுப்புகிறார் உங்கள மாதிரி நான் வேலை செஞ்சா பரவால்ல ஏன்னா என் வேலை எனக்கு தான் தெரியும் என்னோட வேலை மூளை யூஸ் பண்றது நீங்க எல்லாம் செய்றதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் பேச ரவிக்கு கோவம் வருகிறது உடனே எங்களோட வேலையும் பெருசு தான் அவங்க அவங்க வேலை அவங்களுக்கு பெருசுதான் நீ மட்டும் தான் வேலை பார்க்கிற மாதிரி சீன் போடாத என ரவி பேச ஆரம்பிக்க உடனே ரோகிணி அவர் பசியில் கத்துறாரு நீங்க ஒன்னும் கண்டுக்காத ரவி என பேசுகிறார்.
ஆனாலும் மனோஜ் விடுவது போல் தெரியவில்லை அது இல்ல ரோகிணி என்னோட வேலை பெரிசு இவங்க எல்லாம் செய்யறது ஒரு வேலையே கிடையாது என பேச உடனே அண்ணாமலை யார் வேலையும் அவ்வளவு மட்டமா பேசிட முடியாது அவங்க அவங்களுக்கு செய்ற வேலை பெருசு தான் என பேசுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க ரோகிணி அவரை அழைத்து செல்கிறார்.
முத்து மீனாவுக்கு போன் பண்ணி பாத்துட்டு மீனாவின் தங்கைக்கு கால் பண்ணுகிறார் அவரும் இங்கே வரவில்லை எனக் கூற சத்தியா அப்ப அந்த ஆளு தான் ஏதோ பிரச்சனை பண்ணி இருக்காரு அதனாலதான் அக்கா எங்கேயோ போயிருக்கு என பேசுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது..