சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் சர்ப்ரைஸ் ஆக கிஃப்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் முதலில் மனோஜ் நவரத்தின மாலையை கிப்டாக கொடுக்கிறார் அதனைத் தொடர்ந்து என்னோட கிப்ட் என்று ரோகினி கூற அதான் என்ன பளபளன்னு மாத்திட்டியே என கூறுகிறார். அடுத்ததாக ரவி என்னோட கிப்ட் இந்த கேக் தான் நான் அதிகமா கேக் சாப்பிட மாட்டேன் என பாட்டி கூற இந்த கேக்கை எல்லாரும் சாப்பிடலாம் என கூறுகிறான்.
மேலும் அடுத்ததாக சுருதி ஒரு மொபைல் போனை கிப்ட் ஆக கொடுக்க இது எதுக்கு எனக்கு என கேட்க நீங்க இனிமே சீரியல் எல்லாத்தையும் இதுலயே பார்க்கலாம் அதற்காக நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன் என கூறுகிறார். அவரை தொடர்ந்து சுருதியின் அம்மாவும் கொடுக்கிறார் அதனை தொடர்ந்து மீனாவின் அம்மா புடவையை வாங்கி கிப்டாக கொடுக்கிறார் அதனைப் பார்த்து விஜயா கிண்டலடிக்க பார்வதி அவர்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள் என பேசி சமாளிக்கிறார்.
உடனே மனோஜ் வாங்க கேக் வெட்டலாம் என கூற எல்லாரும் கிப்ட் கொடுத்தாச்சு எனவும் கூறுகிறார்கள் அதற்கு பாட்டி இன்னும் என் பேரன் முத்து வரலையே என கூறுகிறார். அதற்கு மனோஜ் அவன் இனி குடிச்சிட்டு காலையில தான் வருவான் என பேச டேய் தொழிலதிபர நீ நினைக்கிற மாதிரி நடக்காது என முத்து வருகிறார். அவன் ஒண்ணுமே வாங்கல வெறுங்கைய வீசி கொண்டு வந்துள்ளான் என பேச அதற்கு முத்து என்னோட சர்ப்ரைஸ் கிப்ட் என கூறி இரண்டு பாட்டிகளை அழைத்து வருகிறார் அந்த பாட்டி இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்.
இதனால் பாட்டி சந்தோஷப்படுகிறார் பாட்டி ஒவ்வொருத்தராக அறிமுகப்படுத்தி வைக்கிறார் அப்பொழுது அண்ணாமலையையும் அறிமுகப்படுத்த அண்ணாமலை கொஞ்சம் கூட மாறவே இல்லை எனக் கூறுகிறார். என் பேத்தி இவதான் முத்துவோட பொண்டாட்டி இவ தான் மூத்த மருமகள் என ஒவ்வொருத்தரையும் அறிமுகப்படுத்துகிறார்.
மேலும் ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் இந்த சர்ப்ரைஸ் கிப்ட் முத்துவுக்கு தான் என பேசிக் கொண்டிருக்க அதான் மீனா ஒண்ணுமே கொடுக்கலையே என இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் மீனா எனக்கும் ஒரு கிப்ட் கொடுக்கணும்னு தோணுது என இன்னொரு வீடியோவை காட்டி இதனை பாட்டியே பேசியது இது அனைவருக்கும் போட்டுக் காட்ட வேண்டும் என பிளான் பண்ணி டிவியில் போடுகிறார்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை பாட்டி விலா வரியாக கூறுகிறார்.
கடைசியாக இந்த வாழ்க்கையை நாம் அனுபவித்து வாழ வேண்டும் என பஞ்ச் டயலாக் பேச அனைவரும் கைதட்டுகிறார்கள் எப்படி சந்தோஷத்துடன் சிறகடிக்க ஆசை முடிந்துள்ளது.