சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வாங்கிய இன்னொரு காருக்கு டிரைவராக முத்துவின் நண்பன் வருகிறார் அப்பொழுது அவரிடம் கார் ஓட்டும்போது எந்த தவறும் நடக்கக்கூடாது என மீனா கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணாமலை முத்து பாவம் பார்ப்பான் அதனால நீயே இதெல்லாம் கவனிச்சுக்கோ என மீனா விடம் கூறுகிறார்.
உடனே விஜயா பெரிய பிளைட் இதை ஓட்ட இன்னொரு ஆள் வேற என கிண்டல் அடிக்கிறார் அதே போல் முத்துவின் நண்பன் இந்த ரெண்டு கார் மட்டும் இல்லாம இன்னும் 200 கார வாங்கி நீ தொழிலதிபரா வருவ முத்து என வாழ்த்துகிறார். அதற்கு ரோகினியின் கணவர் மனோஜ் இவன்லாம் தொழிலதிபரா ஆயிட்டா அப்புறம் என்ன இருக்கு என கிண்டல் அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் விஜயாவும் ஆமாம் தொழிலதிபரா வந்துருவான் என கிண்டலாக பேச மீனாவுக்கு கோபம் வருகிறது.
உடனே மீனா ஏன் இவர் தொழில் அதிர்பா வரக்கூடாதா மனோஜ் மட்டும் தொழில் வரணுமா என பேச உடனே முத்து டேய் தொழிலதிபர நீ நாலு லட்சம் ஏமாந்தியே அதிலேயே உன் லட்சணம் தெரிகிறது என பேச ஆரம்பிக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் உடனே அண்ணாமலை ஏன்டா தேவையில்லாத பேசிகிட்டு இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சது அதுக்குள்ள அடுத்த பிரச்சனையா என பேசுகிறார்.
உடனே விஜயாவை பார்த்து ஒரு பிள்ளையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் முத்துவை வேணாம்னு மிதிச்சு பேசுறதும் நல்லா இல்ல இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் ஒழுங்கா நடந்துக்கோ என விஜயாவிடம் பேசுகிறார். இவன்லாம் தொழிலதிபரா இரு என மனோஜ் இது என்னோட பிரச்சனைக்கு காரணம் ஒருவரை சந்தித்து விட்டு வருகிறேன் என சென்று சாமியாரை பார்க்க போகிறார்.
அப்பொழுது ஜோசியக்காரர் மனோஜை பார்த்து ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கலர் டிரஸ் போட வேண்டும் என சொல்ல இதை மறக்காமல் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் உனக்கு வரப்போற ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என கூறி விடுகிறார் . அதேபோல் மற்றொரு பக்கம் உண்டியல் வாங்கி விட்டதாக மீனாவிடம் கூற விஜயா இந்த நிலைமை வருமென்று எதிர்பார்த்தேன் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என உண்டியல் எடுத்துக் கொண்டு தெரு தெருவா காசு வாங்கி வீடு கட்ட போறியா என விஜயா கிண்டல் அடிக்கிறார்.
அப்பொழுது மனோஜ் அம்மா என கூப்பிட இந்த பிச்சைக்காரன் தொல்ல தாங்க முடியல என விஜயா கூறுகிறார் உடனே மனோஜ் அம்மா நான் தான் என பேச என்னடா கோலம் இது அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் இதெல்லாம் புடுங்கி போட்டு சட்டையை போட்டுட்டு வா என கேட்க இது என் தனிப்பட்ட விஷயம் இதுல நீங்க தலையிடக்கூடாது என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார் உடனே முத்து அதனை விஜயாவிடம் சொல்லி காமிக்கிறார் ஆசைப்பிள்ளை என்ன வார்த்தை சொல்லுச்சு பாத்தீங்களா எனவும் பேசுகிறார்கள்.
அந்த சமயத்தில் ரோகினி வர முத்து மனோஜை தரகுறைவாக பேசுகிறார் அதற்கு ரோகிணி ஏன் இப்படி பேசுகிறார் என மீனாவிடம் கேட்க நீங்க உள்ள போயி மனோஜ்ஜெய் பாருங்க என மீனா கூறுகிறார் ரோகிணி மனோஜ் பார்த்தபோது அதிர்ச்சடைகிறார் பிறகு இந்த காஸ்டியூமை மாத்து எனக் கூற அதெல்லாம் முடியாது இதில் தான் இருப்பேன் எனக்கு வர ஆபத்திலிருந்து தப்பிக்க இதுதான் ஒரே வழி என பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.