சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் முத்து கிச்சனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கவரிங் நகையை கொடுத்து நம்மளை ஏமாற்றி விட்டார்கள் இதை இப்படியே விட்டால் சரி வராது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு மீனா பாட்டி வந்துருவாங்க பாட்டி சொன்ன மாதிரி நாம ஏதாவது ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதான் நகை இல்லையே என முத்து கூற நகை இல்லையென்றால் என்ன அவங்க மனச டச் பண்ற மாதிரி ஏதாவது ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என இருவரும் யோசித்து கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் போய் மொட்டை மாடியில் பாய் போடுங்க நான் வருகிறேன் என மீனா கூறுகிறார், அடுத்த நாள் பாட்டியை முத்து காரில் அழைத்து வருகிறார் முத்து அமைதியாக இருப்பதை பார்த்து பாட்டி உனக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு அமைதியா இருக்க நான் வருவது உனக்கு சந்தோஷமா இல்லையா என கேட்க நீ வந்தா என்னோட பாரம் எல்லாமே குறையும் பாட்டி நீ ஏன் அப்படி நினைக்கிற என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் டிரைவிங் போனேன் அதனால என்னால் ஜாலியாக இருக்க முடியவில்லை எனக் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் பாட்டி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆரத்தி எடுக்க மீனா வரும்பொழுது அதனை பிடுங்கி ரோகினி இடம் கொடுத்து நீங்க ரெண்டு பேரும் எடுங்கள் என கூறுகிறார் ஆனால் மீனா எங்கே என பாட்டி கேட்க மீனாவை அனைவரும் அழைக்கிறார்கள் அப்பொழுது ஆரத்தி எடுக்க எல்லாத்தையும் ரெடிபண்ணுனது மீனாதான் வர வழியில் வழிப்பறி நடந்துள்ளது என கூறுகிறார்.
ஒரு வழியாக ஆரத்தி எடுத்து விட்டு உள்ளே அனைவரும் செல்கிறார்கள் அப்பொழுது பாட்டியை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். என் அண்ணாமலை இதையெல்லாம் உங்க பேரன்கள் செஞ்சது இதைவிட பிரமாதமான கிப்ட் எல்லாம் வச்சிருக்காங்க என பேசுகிறார் அதற்கு நீங்க எப்படி என் மேல இவ்வளவு பாசமா இருக்கீங்களோ அதே மாதிரி நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போறேன் என் மனசு டச் பண்ற மாதிரி யார் கிப்ட் கொடுக்கிறீர்களோ அவர்களுக்கு எதிர் கிப்ட் கொடுக்கப் போகிறேன் என கூறுகிறார்.
அப்பொழுது விஜயா என்ன கிப்ட் என கேளுங்கள் என அண்ணாமலையிடம் கூற அதை உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை என்பது போல் பாட்டி கூறுகிறார் உடனே ரோகினி மற்றும் மனோஜ் பாட்டி என்ன கிப்ட் கொடுப்பாங்கள் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அது எப்படி எனக்கு தெரியும் உங்க பாட்டி தானே உனக்கு தானே தெரியும் என கூறுகிறார் நாம புடவை வாங்கி வச்சிருக்கோம் ஆனால் அவங்களுக்கு மனச டச் பண்ற மாதிரி ஏதாவது ஒரு கிப்ட் கொடுக்கணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் ரவி மற்றும் சுருதி இருவரும் பேசிக் கொண்டிருக்க அவங்களுக்கு மொபைல் போன் கிப்டாக கொடுக்கப் போகிறேன் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மீனா தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து பாட்டி உடைய எண்பதாவது பிறந்த நாள் நீங்க வரவேண்டும் உங்களுக்கு என்ன தோணுதோ அதை வாங்கிட்டு வாங்க என பேசுகிறார் இப்படி ஆளாளுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் பாட்டி என்ன கிப்ட் கொடுக்கப் போகிறார் என்றும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.