சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி ஸ்ருதியிடம் பழைய புகைப்படங்களை காட்டிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சுருதி ரவியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து இது ரவியா ரொம்ப க்யூட்டா இருக்கான் என பேசிக்கொண்டு இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பப்பி ஷேமா இருக்கிறான் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது ரவி பார்த்துவிட்டு ஸ்ருதியை துரத்துகிறார்.
அந்த சமயத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்புகிறார்கள் அண்ணாமலை மற்றும் விஜயா அப்பொழுது அவர்களைப் பார்த்து ஏன் இப்ப வீட்டுக்குள்ளேயே ஓடுறீங்க என கேட்கிறார். அதற்கு சுருதி இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா என புகைப்படத்தை காட்டுகிறார். அண்ணாமலை உக்காந்ததும் விஜயா தண்ணி கொண்டு வா எனக் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒரு வழியாக அப்பா பேசிவிட்டார் என ரவி கூற நான் எப்ப பேசாம இருந்தான் இப்ப தான் பேசுறனா என அண்ணாமலை கேட்கிறார். உடனே அண்ணாமலை கழுத்தில் பொட்டு இருக்கிறது அதனை பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள் அந்த பொட்டை எடுத்து விஜயா நெற்றியில் வைக்க சொல்லி பாட்டி வற்புறுத்துகிறார்.
மற்றொரு காட்சியில் ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது நான் கிளம்புகிறேன் என பாட்டி கூற நான் வந்து விட்டுட்டு வருகிறேன் என அழைத்துச் செல்கிறார். அடுத்த நாள் முத்து தன்னுடைய நண்பன் கார்த்தியை அழைத்து வருகிறார். அப்பொழுது புதிய காரை கார்த்திதான் ஓட்டப் போகிறான் என கூற அதற்கு சந்தோஷப்படுகிறார்கள் கார் ஓட்டும்போது எந்த தவறும் நடக்கக்கூடாது என கூறுகிறார்கள்.
அண்ணாமலை தன்னுடைய கையால் சாவியை கொடுக்க அதனை வாங்கி கொள்கிறார் கார்த்தி. பிறகு ரோகிணி மற்றும் மனோஜ் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ்க்கு தூக்கம் வராமல் இருக்கிறார் அப்பொழுது தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து எனக்கு தூக்கம் வரவில்லை வெளியே வா என கூறுகிறார்.
விஜயா வெளியே வந்ததும் லெட்டரை கொடுக்கிறார் அதை படித்து பார்த்துவிட்டு அத்தை ஐம்பதாயிரம் பணம் கொடுக்க சொன்னாங்க அதற்காக தான் இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு இருக்கியா என பேசுகிறார். அதற்கு மனோஜ் எனக்கு புரிந்து விட்டது என்னை கவுக்க தான் இப்படி ஒரு பிளான் போட்டு இருக்கியா அம்மா என தன்னுடைய அம்மாவை பார்த்து கேள்வி கேட்கிறார்.
அதற்கு விஜயாவுக்கு கோவம் வந்து நீயே ஒரு உதவாக்கரை உனக்காக நான் ஒவ்வொரு டைமும் ரிஸ்க் எடுத்து நானே மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறேன் நீ என்னைய பார்த்து சந்தேகப்படுறியா என அடித்து துவம்சம் செய்கிறார். ஒவ்வொரு அடியும் இடி போல் விழ மனோஜ் வலிக்கிறது என கத்துகிறார். மேலும் நீயாச்சும் உன் பிரச்சனை ஆச்சு ஏதாவது பண்ணிக்கோ என கூறிவிட்டு விஜயா உள்ளே செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.