சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி சொன்ன ஐடியாவால் அனைவரும் தோசை சுட்டு சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இது ரொமான்டிக்காக இருக்கிறது என ஸ்ருதி கூறிக் கொண்டிருக்கிறார் மேலும் பாட்டியிடம் உங்களுடையது லவ் மேரேஜ் தான என கேட்கிறார்.
உடனே பாட்டி வெக்கப்பட்டு கொண்டு கதையை சொல்லுகிறார் அந்த சமயத்தில் விஜயாவை அண்ணாமலைக்கு ஊட்டி விட சொல்ல அண்ணாமலை நான் சாப்பிட்டு விட்டேன் எனக்கு போதும் என எழுந்து செல்கிறார். இதனால் விஜயா சோகமாக இருக்கிறார் உடனே பாட்டி முத்து அண்ணாமலையையும் விஜயாவையும் கோவிலுக்கு அழைத்து சென்று வா எனக் கூற நான் போகிறேன் என முத்து அவசர அவசரமாக கூறுகிறார்.
உடனே அடுத்த புதிய காரை வாங்க முத்து ரெடியாகிறார். அதுமட்டுமில்லாமல் புதிய காரில் அப்பா அம்மாவை அழைத்து செல்லலாம் என திட்டம் போடுகிறார்கள். மற்றொரு பக்கம் மனோஜ் கடைக்கு வந்து ஒரு மொட்டை கடுதாசியை கொடுத்துவிட்டு ஒருவர் செல்கிறார் உங்கள் சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு ஆபத்து என அந்த பேப்பரில் எழுதப்பட்டுள்ளது இதனை பார்த்து மனோஜ் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
அப்பொழுது ரோகினி வர ரோகனியிடம் அந்த கடிதத்தை காட்டுகிறார் உடனே மனோஜ் பைத்தியம் பிடித்தது போல் அலைந்து திரிகிறார். அடுத்த காட்சியில் ரோகினி மற்றும் ரோகினையின் தோழி யார் இதை அனுப்பி இருப்பார்கள் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அந்த ஜீவ அனுப்பி இருக்கலாம் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.
மற்றொரு பக்கம் மூத்து புதிய காரை வீட்டிற்கு எடுத்து வருகிறார் அப்பொழுது கீழே அனைவரும் வருகிறார்கள் முத்துவை வாழ்த்துகிறார்கள் ஆனால் விஜயா வழக்கம்போல் முத்துவை கேவலப்படுத்த அதற்கு பதிலடி கொடுக்கிறார் பாட்டி.
பிறகு முத்து மற்றும் மீனா அண்ணாமலை விஜயா என அனைவரும் காரில் செல்ல இருவரும் தனித்தனியாக உட்காருகிறார்கள் உடனே முத்து பிளான் பண்ணி இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள் எபிசோடில் கடிதத்தை விஜயாவிடம் காட்ட அத்தை பணம் கொடுக்க சொன்னதால் இப்படி ஒரு பிளான் போட்டு இருக்கியா என மனோஜை பார்த்து கேள்வி கேட்கிறார் விஜயா இத்துடன் எபிசோட் முடிகிறது.