படையப்பா நீலாம்பரியாக மாறி மீனாவிடம் சபதம் போட்ட விஜயா.. கையை முறுக்கிக் கொண்டு கத்திய முத்து.. சபாஷ் இப்பதான் கதையே சூடு பிடிக்குது..

siragadikka aasai july 19
siragadikka aasai july 19

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்கிறார் அப்பொழுது அனைவரும் கதவை தட்டி பார்க்கிறார்கள் ஆனால் அவர் வருவது போல் தெரியவில்லை. உடனே மீனா ஏதாவது பண்ணுங்க என முத்து விடம் கேட்க முத்து யார் கூப்பிட்டால் வருவாங்கன்னு எனக்கு தெரியும் என பார்வதிக்கு போன் பண்ணுகிறார்.

விடிய காலை விடிந்ததும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள் ஆனால் இன்னும் விஜயா உள்ளே இருந்து வெளியே வரவில்லை அப்பொழுது முத்து மற்றும் மீனா என இருவரும் வருகிறார்கள். மனோஜ் அம்மா எந்த ஒரு சத்தமும் இல்லாம இருக்காங்க எனக்கு பயமாய் இருக்கிறது என கூற ரோகிணி ஆறுதலாக பேசுகிறார். உடனே முத்துவிடம் உன்னால தான் எல்லா பிரச்சனையும் என மனோ சண்டைக்கு போகிறார்.

உடனே முத்து என்னடா நீ திருடி கிட்டு மொத்த பழியும் என் மேல போட பாக்குறியா நீ திருடுனது தப்பு கிடையாதா என கேட்க ஆமா பொல்லாத நகை என வார்த்தையை  விடுகிறார் உடனே முத்துவுக்கு கோவம் வருகிறது ஏதாவது பேசினா மூஞ்சி முகரை எல்லாம் அடிச்சு உடைச்சிடுவேன் என கூறுகிறார். எங்க அடிப்பாக்கும் என மனோஜ் கூற முத்து அடிப்பதற்கு சட்டையை பிடிக்கிறார் இப்படி இருவரும் ்டை போட்டுக் கொண்டருக்கும் பொழுது அண்ணாமலை எதுவும் நடக்காதது போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

உடனே ரவி வந்து எதுக்காக டா நீங்க அடிச்சுக்ரீங்க ஃபர்ஸ்ட் அம்மாவை பார்க்கும் என கதவை தட்டி பார்க்கிறார். உங்கள மாதிரி யாருக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லைன்னு இருக்க முடியாது என மீனா விடம் சண்டைக்கு போக யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க நீங்க எல்லாம் அத்தை மேல எவ்வளவு பாசமா இருக்கீங்களோ அதை விட அதிகமா அவரு பாசமாய் இருக்கிறார் என மீனா கூறுகிறார்.

அப்பொழுது பார்வதி வருகிறார் பார்வதி வந்து முத்து கால் பண்ணியதையும் நகையை திருடி இதனால் மாட்டி கொண்டதையும் கூறுகிறார் உடனே அண்ணாமலையை பார்த்து நீங்க பேசுங்க அண்ணா எனபார்வதி  கேட்க இந்த நகை திருட்டுல உனக்கும் பங்கு இருக்கா என கேட்கிறார் அது வந்து என இழுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் ஏதோ மனோஜ் மேல இருக்கிற பாசத்துல  தப்பாக செஞ்சு டாங்க எனக் கூறுகிறார்கள்.

உடனே பார்வதி ஆன்ட்டி கதவை தட்டி பார்க்கிறார். உள்ளே இழுத்து சென்ற விஜயா இருவரும் பேசிவிட்டு வெளியே வருகிறார்கள். அப்பொழுது நகை திருடியதற்காக அண்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பார்வதி கூற ஆனால் அண்ணாமலை என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும் மீனா விடம் மன்னிப்பு கேட்க சொல்லு என கூறுகிறார் நான் மீனா விடம் மன்னிப்பு கேட்பதா அது முடியவே முடியாது என பேச உடனே மனோஜ் மீனாவிடம் எதுக்கு அம்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூற அப்ப நீ தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என முத்து  கூறுகிறார்.

உடனே விஜயா படையப்பா நீலாம்பரி ஆக மாறி என் உசுரே போனாலும் நான் இவள்ட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன் என வலையலை கழட்டி மூஞ்சில எரிகிறார். அதனை பார்த்த முத்து எரிமலையாக வெடித்து கையை முஸ்டிகளை மடக்கிக்கொண்டு கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் இதுவே வேற யாராவது இருந்தா நடக்கறதே வேற எனவும் மிரட்டுகிறார் என்ன என் தலையை எடுத்துடுவியா எடுத்துக்கோ என விஜயா ஆங்கரோசத்துடன் கத்துகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.