உன் அப்பன் வீட்டில் இருந்தா எடுத்துட்டு வந்த… நகையை கழட்டி மீனா முகத்தில் வீசிய விஜயா..

siragadikka aasai july 18 promo
siragadikka aasai july 18 promo

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை முத்து பொரிவைத்து பிடித்துள்ளார் உடனே காசு எங்கிருந்து வந்தது நாலு லட்சம் என கேட்க என்னுடைய நண்பன் கொடுத்தான் எனக் கூற அந்த பார்க் நண்பனை நானும் பார்த்துவிட்டேன் அவன் ஒரு ரூபாய் கூட காசு கொடுக்கவில்லை என முத்து கூறுகிறார் உடனே முத்து விடுவது போல் தெரியவில்லை எங்கிருந்து வந்தது என தோண்டி தோண்டி கேட்க ஆவேசப்பட்டு ஆமா நான் தான் நகை எடுத்தேன் என கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் அண்ணாமலை மனோஜை அழைத்து உனக்கு எங்கிருந்து வந்தது இந்த திருட்டு புத்தி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா என்றைக்கு தான் திருந்துவ என செவுலில் அரைக்கிறார். அப்பொழுது விஜயா சப்போர்ட் செய்து விட்டுடுங்க என கூற அவனை அடிக்கிறதுக்கு முன்னாடி முதல்ல உன்னை அடிக்கணும் என கையை ஓங்குகிறார் அப்பொழுது முத்து தடுத்து நிறுத்துகிறார் அம்மாவை இப்படி செய்ய சொல்லி இருப்பதே அவன் தான் என கூறுகிறார்.

என்னதான் விஜயா முத்துவை மதிக்கவில்லை என்றாலும் ஆனால் முத்துவுக்கு விஜயாவின் மீது அதிக பாசம் இருக்கிறது என்பதை இங்கே உணர்த்துகிறார்கள். உடனே விஜயா எல்லா தப்புக்கும் நான் தான் காரணம் என்று சொல்றீங்களா என கூறிவிட்டு வீட்டிற்குள் செ்று லை மி கொள்கிறார் உடனே எங்கு தூக்க மாட்டிக்கப் போகிறாரோ என அனைவரும் தட்டிப் பார்க்கிறார்கள் ஆனால் அண்ணாமலை மட்டும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

முத்து அண்ணாமலை அழைத்து அம்மாவை அழைக்க வேண்டும் எனக் கூற உன் நகையை எடுத்துக்கிட்டு உங்க மேலயே திருட்டுப்படழிய சுமத்தினால் ஆனா நீங்க அவளை கூப்பிடறதுக்கு என்கிட்ட வக்காலத்து வாங்குகிறீர்களா? என கையை உதறிவிட்டு அண்ணாமலை செல்கிறார் அதுமட்டுமில்லாமல் இதுக்கு மேல ஏதாவது பேசினா வீட்டை விட்டு வெளில போயிடுவேன் என அண்ணாமலை மிரட்டுகிறார் இதனால் முத்து விட்டு விடுகிறார்.

அடுத்த நாள் ப்ரோமோவில் மீனா விடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மனோஜ் என கூறிக் கொண்டிருக்க நான் எதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மனோஜ் கேட்கிறார் தப்பு செஞ்சது நீ தானே எனக் கூறுகிறார் உடனே விஜயா உன் அப்பன் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த நகையா இது.. இந்த குண்டுமணி நகை என கூறி தன் வளையலை கழட்டி மீனா முகத்தில் வீசுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.