அண்ணாமலை நீங்க எடுத்தது தான் சரியான முடிவு.. மனோஜ்ஜை ஓங்கி அறைந்த முத்து.. வக்காலத்து வாங்கிய ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா..

siragadikka aasai july 18
siragadikka aasai july 18

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நகை திருடியவர்களை பொரிவைத்து பிடித்துள்ளார். அதாவது மனோஜை சிக்க வைத்துள்ளார் ஆனால் மனோஜ் கடைசி வரை சமாளித்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ரோகிணி மனோஜை அழைத்து செல்ல முத்து தடுத்து இதற்கு விடை கிடைக்காமல் நான் யாரையும் விட போறதில்லை என முத்து கூறுகிறார். அந்த 4 லட்சம் எப்படி வந்தது என கேட்க பார்க் நண்பன் கொடுத்தான் எனக் கூற நான் பார்க் நண்பனை பார்த்து விட்டேன் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என கூறிவிட்டான் என கூறுகிறார்  முத்து.

அதுமட்டுமில்லாமல் எப்படி உனக்கு பணம் வந்தது என தோண்டி தோண்டி கேட்க உடனே மனோஜ் கோபப்பட்டு அதுக்கு என்ன இப்ப என ஆவேசப்பட்டு கூறி விடுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சடைகிறார் உடனே இந்த பக்கம் வா என அண்ணாமலை மனோஜை கூப்பிட்ட்டு அடி வெளுத்து வாங்குகிறார் உனக்கு அந்த திருட்டு புத்தி போகாதா என அடிக்கிறார் அப்பொழுது மனோஜ் அம்மா தான் நகை எடுத்து கொடுத்தாங்க நான் அடகு வைக்க தான் போனேன் ஆனா காசு பத்தல அதனால வித்துட்டேன் என கூறுகிறார்.

உடனே விஜயாவை கண்ணால் எரிப்பது போல் பார்க்கிறார் அப்பொழுது விஜயா விட்டுடுங்க அவன எனக் கூற எல்லாம் உன்னால தான் உன்ன அடிச்சா சரியாகிடும் இந்த பிரச்சனையே இனிமே என்கிட்ட பேசாத உன் கையால நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் என கூறுகிறார். ஆனாலும் மனோஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்து கோபப்பட்டு செவுலில் அறைகிறான் என்ன பேச்சு பேசினா ஆனா என் நகையவே  வித்துட்டியா என கூறுகிறார்.

உடனே அண்ணாமலைவிஜயாவை திட்ட எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணமா? என மாட்டிக்கொண்ட விஜயா கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் உள்ளே சென்று கதவை மூடி கொள்கிறார் மனோஜை ரோகிணி போய் பாரு என கேட்க உடனே கதவை தட்டி பார்க்கிறார். ஆனால் விஜயா எந்த சத்தமும் போடாமல் உள்ளே இருக்கிறார். அடுத்ததாக ரவி கதவை தட்டி பார்க்கிறார் ரோகிணி கதவைத் தட்டி பார்க்கிறார் யார் கூப்பிட்டம் வராமல் இருக்கிறார்.

அந்த சமயத்தில் முத்து அண்ணாமலையிடம் சென்று அப்பா அப்பா நீங்க கொஞ்சம் கூப்பிடுங்க அம்மா வந்து விடுவார்கள் என கேட்கிறார் அதற்கு அண்ணாமலை உங்க நகையை திருடிட்டு உங்க மேலயே பழி போட்டாங்களே அவளை கூப்பிட சொல்றீங்களா என்னால கூப்பிட முடியாது. என் முடிவுல நான் உறுதியாக இருக்கிறேன் என கையை உதறிவிட்டு செல்கிறார் ஆனாலும் முத்து விடுவது போல் தெரியவில்லை மறுபடியும் அண்ணாமலையை கூப்பிட சொல்ல உடனே அண்ணாமலை நான் இங்கே இருக்கணுமா இல்ல வீட்டை விட்டு வெளில போகணுமா என கேட்கிறார் அதனால் முத்து அமைதியாக செல்கிறார்.

உடனே மீனா என்னங்க மாமா இப்படி சொல்லிட்டாரு என கேட்க அவர் எவ்ளோ கோவத்துல இருக்காருன்னு பார்த்தியா இதுக்கு மேல நம்மளால எதுவும் பண்ண முடியாது கொஞ்ச நேரம் விட்டுட்டு அவங்களே வந்துருவாங்க இது இப்ப நேத்து நடக்கல சின்ன வயசுல இருந்து இப்படித்தான் நடந்துகிட்டு இருகக்காங்க என கூறுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.