சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நகை திருடியவர்களை பிடிப்பதற்காக மந்திரித்த எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ளார் அதனால் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் வாய் கோணிக்கும் என அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இந்த நிலையில் நடுராத்திரியில் ரோகினியை எழுப்பி என் வாய் நல்லா இருக்கா பாரு என கேட்கிறார்.
அதற்கு ரோகிணி இதோட அஞ்சாவது டைம் எழுப்பி இதை மாதிரி கேட்கிற இன்னொரு டைம் என்னை எழுப்பினினா நெஜமாலுமே உன் வாய் கோணிக்கும் நானே அடிச்சு கோணிக்கை வச்சுருவேன் என கூறுகிறார். அப்படி உனக்கு பயமா இருந்தா நீயே போய் உண்மையை சொல்ல வேண்டியதுதான எதுக்கு என் உயிரை வாங்குற ஏன் தூக்கத்தை கெடுக்கிற என கேட்கிறார். உடனே மனோஜ் திருட்டுத்தனமாக வெளியே வருகிறார் அதேபோல் விஜயாவும் திருட்டுத்தனமாக வெளியே வந்து இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.
விஜயா பார்வதியிடம் ஐடியா கேட்கிறார் பார்வதி ஒரு சாமியார் இருக்கிறார். அங்கு போய் நாம் பார்க்கலாம் கண்டிப்பா இந்த மாந்திரீகம் உண்மைதான் வாய் கோணிக்கும் நீங்க கண்டிப்பா மாட்டிப்பீங்க அதனால காலையில சாமியாரை சென்று பார்க்கலாம் என கூறுகிறார். அதிகாலையில் சாமியாரை சென்று பார்க்க செல்கிறார்கள். அப்பொழுது உங்க திருட்டுத்தனம் உங்க முகத்திலேயே தெரிகிறது கண்டிப்பா நீங்க மாட்டுப்பீங்க நான் ஒரு பரிகாரம் சொல்றேன் அதை செய்யுங்க எனக்கூறி எலுமிச்சம் பழத்தை மந்திரித்து கொடுக்கிறார்.
ஆனாலும் மனோஜ் சாமியாரிடம் லந்தாக பேசுகிறார் இந்த எலுமிச்சம் பழத்தை மந்திரித்து எலுமிச்சம் பழத்தின் அருகில் வைத்தால் அதனுடைய சக்தியை உறிஞ்சி எடுத்து விடும் என கூறுகிறார். ஆனால் இந்த எலுமிச்சம் பழம் கருப்பானால் அந்த எலுமிச்சம் பழத்துக்கு பவர் அதிகம் எனவும் கூறுகிறார் இதனால் சாமியார் அப்படி கருப்பாகிவிட்டால் உடனே வாங்கள் வேற ஒரு பெரிய பழத்தை தருகிறேன் எனக் கூற மனோஜ் அதற்கு பலாப்பழமா என கேட்கிறார்.
இப்படி சாமியார் சொன்னதை கேட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்து எலுமிச்சம் பழத்தை அருகில் வைக்க விஜயா மனோஜை கூப்பிடுகிறார் ஆனால் மனோஜ் என்னால் வர முடியாது எனக் கூறுகிறார். உடனே விஜயா முதலில் வைக்கிறார் எலுமிச்சம்பழம் உருண்டு கீழே விழுகிறது. அதற்கு விஜயா நான் முதலில் வைத்தேன் இப்ப நீ போய் எடுத்து வை என கூறி உள்ளே தள்ளி விடுகிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.