சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து நகை எப்படி மாறியது என்பதை கண்டுபிடிப்பதற்காக சாமியார் வேடம் போட்டு எலுமிச்சம் பழத்தை மந்திரிச்சு எடுத்து வந்ததாக வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது ஓம் க்ரீம் க்ரீம் என கூறிக்கொண்டே உள்ளே வருகிறார் அனைவரும் புரியாத புதிராக முத்துவை பார்க்கிறார்கள். எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என அனைவரும் கேட்க ஒரு வழியாக முத்து நகை திருடு போனதை குறித்து சாமியாரிடம் சொன்னேன் அவர் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் ஏதோ பண்ணியிருக்கிறார்கள் இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டில் வை அவர்களுக்கு வாய் கோணிக்கும் என கூறியுள்ளார்கள் எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆமா இதே மாதிரி எங்க அம்மாவும் சொல்லி இருக்காங்க என அண்ணாமலையும் கூறுகிறார் அதே போல் மீனாவும் ஏதாவது பொருள் காணாம போச்சுன்னா நாங்களும் இப்படித்தான் பண்ணுவோம் என தான் பங்கிற்கு கூறுகிறார் ஆனால் விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சியில் மாறி மாறி வாய் கோணிப்பது போல் பார்த்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் இங்க வைக்காத வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என கூற நீங்க ஏன் பதட்டம் அடைகிறீர்கள்? நீங்க எதுவும் எடுக்கலைல அப்புறம் ஏன் பயப்படுறீங்க என முத்து கேள்வி எழுப்புிறார்.
வழியாக னைவரையும் சமாளித்த முத்து கடைசியாக இதெல்லாம் ஸ்டுப்பிட் தனமா இருக்கு என ஸ்ருதி கூறுகிறார் ஆனால் ரவி வாய மூடு ஏதாவது ஆயிடப்போகுது என கூறுகிறார். தூங்குவதற்கு போகிறார்கள் முத்து மற்றும் மீனா எந்த சாமியாரிடம் போனாய் என முத்துவிடம் கேள்வி எழுப்புகிறார் நான் சாமியாரெல்லாம் பார்க்கல பாய் கடையில் வாங்கினது தான் இப்ப கண்டிப்பா மனோஜ் செய்து இருந்தா அவனே சிக்கிக் கொள்வான் என கூறுகிறார்.
அதேபோல் மற்றொரு பக்கம் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் மாறி வாய் கோணிப்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ரோகினி வந்து நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருங்க நீங்களே மாட்டிக்காதீங்க என கூறுகிறார். முத்து கோவில் பக்கமே போனதில்லை அவர் போய் சாமியாரை பார்த்தார் என்று சொன்னால் யார் நம்புவா என பேசுகிறார்கள். ரோகிணி கொஞ்சம் கூட முத்துவை நம்பவில்லை ஆனால் மனோஜ் விஜயா பயத்தில் இருக்கிறார்கள்.
சுருதி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ரவி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்க கேரளாவிலும் இது போல் நடந்துள்ளது என கூறுகிறார். உடனே மீனா வர மீனாவிடம் எந்த சாமியாரை பார்த்தார்கள் என கேட்க மீனா உண்மையை கூறி விடுகிறார் சாமியாரை பார்க்கவில்லை மனோஜை பிடிக்க தான் இப்படி ஒரு சதி திட்டம் என்பதை கூற சரியான ஐடியா என ஸ்ருதி உற்சாகம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.