முத்து மீனா செய்த செயலால் கூண்டோடு மாட்டப் போகும் விஜயா மற்றும் மனோஜ்…

siragadikka aasai
siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் நாலு லட்சம் பணத்தை ஏமாந்ததை விஜயாவிடம் கூற உடனே விஜயாவிடம் நகையைக் கேட்கிறார் அடகு வைத்து எப்படியாவது நான் செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என கதறி அழுகிறார் அதனால் விஜயாவும் நகையை எடுத்துக் கொடுத்து விடுகிறார் ஆனால் விஜயா எடுத்து கொடுத்த நகை மீனா உடையது உடனே மீனா முத்து ஆசைப்பட்டது போல் பாட்டிக்கு ஒரு நகையை வாங்கி தர விஜயாவிடம் நகையைகேட்கிறார்கள்.

உடனே விஜயா நகையை எடுத்துக் கொடுத்து விடுகிறார் உடனே மனோஜ் அடகு வைக்க செல்கிறார் ஆனால் அடகு வைத்தால் நாலு லட்சம் தர முடியாது எனக் கூறி விற்றுவிட்டால் தர முடியும் என கடைக்காரர் சொல்லுகிறார் உடனே நகையை விற்று விடுகிறார். இது சமயத்தில் மீனா விஜயாவிடம் தன்னுடைய நகையைக் கேட்க உடனே விஜயா மனோஜிடம் சொல்லி நகையை மீட்டு தர வேண்டும் என கூறுகிறார் ஆனால் மனோஜ் விற்று விட்டதால் கடைக்காரரிடம் போனில் நகையை பற்றி கேட்க அதனை உருக்கியாட்சி என கூறி விடுகிறார்கள்.

உடனே விஜயாவிடம் நகையை உருக்கியாச்சு என மனோஜ் கூற மனோஜை வெளுத்து வாங்குகிறார். நீ ஒரு காரியத்தை கூட உருப்படியா செய்ய மாட்டியா என அடிக்கிறார். அந்த நகை எப்படி இருக்குன்னு கூட எனக்கு தெரியாது என புலம்ப நான் போட்டோ எடுத்து வைத்துள்ளேன் என மனோஜ் கூறுகிறார். உடனே நகையை பார்த்து விட்டு கவரிங் நகையை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கு ரோகினி சுருதி அண்ணாமலை முத்து ன அனைரு சாப்பிட்டுக் கொண்டிுக்கும் பொழுது சாப்பாட்டில் முடி கிடக்கிறது அதனை வைத்து கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார் முத்து.

கவரிங் நகை வாங்கி வந்த விஜயா உள்ளே எப்படியாவது வைக்க வேண்டுமென உள்ளே செல்கிறார் அந்த சமயத்தில் அண்ணாமலை கூப்பிட்டு மீனாவிற்கு அந்த நகையை கொடுக்க வேண்டும் என கூறி விடுகிறார். அவ தான கேட்க மாட்டேன்னு சொன்னா இப்ப மட்டும் எதுக்கு கேக்குற என பதிலுக்கு விஜயா பேச அவ நகை எப்படி வேணாலும் கேட்பா என பேசுகிறார்கள்.

சபதம் எல்லாம் போட்டாலே என வாய்க்கு வந்தபடி பேசுகிறார் விஜயா உடனே நகையை எடுத்துக் கொடுக்கிறார் நகையை பார்த்துவிட்டு மீனா மற்றும் முத்து இருவரும் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விடுகிறார்கள். முத்து மற்றும் மீனா இருவரும் நகைக்கடைக்கு சென்று அந்த புதிய நகையை பாட்டிக்காக வாங்குகிறார்கள் அப்பொழுது தன்னுடைய வளையல் மற்றும் செயினை அடகு வைக்க பார்க்கிறார்கள் ஆனால் அந்த வளையல் செயின் ஒரிஜினல் இல்லை கவரிங் என தெரிய வருகிறது.

கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள் இதனால் முத்து மற்றும் மீனா இந்த நகையை எடுத்துக் கொண்டு சென்று அண்ணாமலை இடம் சொல்ல வேண்டும் என கிளம்புகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.