Siragadikka Aasai Today Promo december 31 : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் பாட்டியிடம் மீனா ரவிக்கு கல்யாணம் ஆனது, அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்த விஷயம் எல்லாத்தையும் சொல்ல பாட்டி பதறி அடித்து வீட்டிற்கு வந்து அண்ணாமலையை பார்த்து நலம் விசாரிக்கிறார்.. பிறகு விஜயாவையும் என் பையன ஒழுங்கா பாத்துக்கல..
உன்னால தான் அவனுக்கு நெஞ்சு வலி வந்திருக்கும் அத என்கிட்ட சொல்லக்கூட இல்ல மறைச்சுட்ட, மீனாதான் என்கிட்ட சொன்னா என்றும், பொங்கலுக்கு எல்லோரும் கிராமத்துக்கு வர வேண்டும் அதுமட்டுமில்லாமல் எனக்கு முதல் கொள்ளு பேர குழந்தைகளை பெற்று தர வங்களுக்கு நான் ஒரு பரிசு வச்சிருக்கேன் என்றும் பாட்டி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் விஜயா கொஞ்சம் துணியை மீனா விடம் கொடுத்து இதை துவச்சிடு என்று சொல்கிறார்.. அந்த நேரத்தில் ஸ்ருதியும் மீனாவிடம் இதுல கொஞ்சம் டாப் இருக்கு இதையும் துவைச்சுருங்க என்று சொல்கிறார்.. மீனாவும் பரவாயில்ல குடுங்க என்று துவக்கி எடுத்துட்டு போகிறார்.
பிறகு ஸ்ருதி இரண்டாயிரம் பணத்தை மீனாவிடம் கொடுத்து இதை வச்சுக்கோங்க என்று சொல்கிறார் அதற்கு மீனா நீங்க பணம் கொடுத்து இந்த வீட்டு வேலைக்காரியாவே மாத்துறிங்களா என்று கேட்க ஸ்ருதி புடிங்க என்று வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து விட்டுப் போகிறார்.. இதைப் பார்த்து விஜயா நக்கலாக சிரிக்கிறார்.
பிறகு மீனா அந்த பணத்தை முத்துவிடம் கொடுப்பதற்கு ஏது இந்த பணம் என கேட்க ஸ்ருதி அவங்க துணி எல்லாம் துவைக்க சொல்லி அதற்கு சம்பளமும் கொடுத்தாங்க என்று சொல்கிறார்.. இதைக் கேட்டு அடுத்து முத்து என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..