siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் ரோகிணியின் மாமா மலேசியாவில் இருந்து வந்தவர் இல்லை என முத்து சந்தேகப்படுகிறார் அதனால் சரக்கு ஊத்திக் கொடுத்து உண்மையை வாங்க முயற்சி செய்கிறார் அப்பொழுது மலேசியா சரக்கு பற்றி கேட்க ஐந்து ஃபுல் எடுத்துக்கொண்டு வந்தேன் ஆனால் கஷ்டம் ஆபிசர் பிடித்து விட்டார்கள் என சமாளிக்கிறார் மலேசியா மாமா.
உடனே நம்ம நாட்டு சரக்கு எனக்கு வேணும் என கேட்க முத்து ரெடி பண்ணுகிறார் சரக்கை குடித்துவிட்டு மலேசியா மாமா உளர ஆரம்பிக்கிறார் அது மட்டும் இல்லாமல் சும்மா இருந்த மனோஜ்க்கும் இரண்டு கிளாஸ் ஊற்றி கொடுத்து விடுகிறார். எப்படி தட்டு தடுமாறி வீட்டின் பக்கம் சென்று சேருகிறார்கள் அப்பொழுது மனோஜை ஒரு சேரில் உட்கார வைக்கிறார் முத்து.
உடனே விஜயா உனக்கு என்ன ஆச்சு மனோஜ் ஏன் இப்படி பாக்குற என கேட்கிறார் அதே போல் ரோகிணியும் எதற்காக மனோஜ் இப்படியே பார்த்துகிட்டு இருக்க என கேட்கிறார் அனைவரும் திருத்திரு என முழிக்கிறார்கள்.
இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அண்ணாமலை டீம் ஜெயிக்கிறதா அல்லது விஜய்யா டீம் ஜெய்கிறதா என போட்டி நடக்கிறது பானை உடைக்கும் போட்டி அப்பொழுது பானையை அனைவரும் உடைத்து பார்க்கிறார்கள் உடைக்க முடியவில்லை மீனா கையில் கம்பை கொடுத்து உடைக்க சொல்கிறார்கள்.
அப்பொழுது மீனா மனோஜ் மண்டையில் ஒரே அடியாக அடிக்கிறார் பலநாள் பகையை பழி தீர்த்துக் கொண்டது போல் அடிக்கிறார் அடுத்ததாக சுருதி பானையை உடைக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது மீனா தூக்கி விட முயற்சி செய்கிறார்.
இதெல்லாம் போங்காட்டம் என கடைசியாக முத்து பானையை உடைக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது பானையை உடைத்து விடுகிறார் அதனால் முத்துவை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது..