ஸ்ருதி அம்மா முன்னாடி மீனாவின் அம்மாவை அசிங்கப்படுத்திய விஜயா.! மனோஜ் ரோகினிக்கு பதிலடி கொடுத்த முத்து..

Siragadikka Aasai january 17
Siragadikka Aasai january 17

Siragadikka Aasai january 17 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வேலை தேடிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது எந்த கம்பெனியிலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பிறகு ஏற்கனவே வேலை செய்த கம்பெனிக்கு செல்கிறார் அங்கு அந்த கம்பெனி முதலாளி மனோஜை மிகவும் அவமானப்படுத்துகிறார். பெண்களுக்கு மதிப்பு கொடுக்க கத்துக்கோ அப்பதான் உன் வைஃப் உனக்கு மதிப்பு கொடுப்பா என அந்த கம்பெனி முதலாளி மூஞ்சில் அடித்தது போல் மனோஜிடம் கூறிவிடுகிறார்.

அடுத்த காட்சியில் ஸ்ருதி மற்றும் ரோகிணி பேசிக்கொண்டிருக்கும் பொழுது முத்து உங்க ரெண்டு பேரு பிரச்சனையில் ஏன் தலையிடுகிறார் அதை பத்தி நீ நினைக்காதீங்க மனோஜ்க்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் என ஆறுதல் கூறுகிறார் சுருதி. அந்த சமயத்தில் விஜயா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சுருதி பேசாம நீங்க பார்லர் இன்னும் ரெண்டு மூணு பிரான்ச் ஆரம்பிச்சுடுங்க மனோஜ் அதுல சிஇஓ போட்டு விடுங்க எதுக்கு நீங்க வேலைக்கு போகணும் என பேச.

இரவு 12 மணிக்கு போன் செய்து திருமணம் ஆன நடிகையின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய ஒல்லி நடிகர்..! விவாகரத்தில் முடிந்த பரிதாபம்..

விஜயா உள்ளே வந்து ஆமா அது தான் நல்லது எதுக்கு மனோஜ் இன்னொருத்தன் கிட்ட கையை கட்டிட்டு எதுக்கு  வேலை பார்க்கணும் உடனே ரோகிணி அதுக்கு பணத்துக்கு நான் எங்க போவேன் என கேட்க உங்க அப்பா கிட்ட கேளு என்ன பேச அப்பா கிட்ட தான் வீட்டு பத்திரத்துக்காக பத்து லட்சம் கடன் வாங்கிட்டேனே இனிமே எப்படி கேட்கிறது என்ன நினைப்பாங்க என பேச உடனே உங்க மாமா கிட்ட கேட்கலாம் என பேசுகிறார்கள் ஆனால் ரோகிணி ஒரு டம்மி பீஸ் என்பது இவர்களுக்கு தெரியாது எப்படி ரோகிணியை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே ரோகிணி அவர் ஏதாவது ஒரு கம்பெனில வேலை பார்த்தால்தான் நாம தப்பிக்க முடியும் அப்பதான் எங்க வீட்டிலேயே நம்புவாங்க என கூறிவிட்டு போனை எடுத்து மனோஜ்க்கு போன் செய்து வேலை கிடைச்சிடுச்சா என கேட்கிறார்.

அடுத்த காட்சியில் ரோகினி வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முதலில் மீனா வருகிறார் அடுத்தது ஸ்ருதி மற்றும் ரவி வருகிறார் அப்பொழுது மனோஜ் வந்துட்டார்னு பார்த்தேன் என பேச ஏன் அப்படி தேடுறீங்க இன்னைக்கு மட்டும் வேலை கிடைச்சிட போகுதா என சாதாரணமாக கேட்க அது வாக்குவாதமாக முத்துகிறது அதற்கு வேலை கிடைக்கலன்னா இந்த வீட்ல மரியாதை இருக்காது சுருதி உனக்கு ஒன்னும் புரியாது என ரோகிணி கூறுகிறார்.

அந்த சமயத்தில் முத்து பேசியதை பத்தி பெருசா எடுத்துக்காதீங்க என சுருதி பேச அதற்கு ரோகிணி கண்டிப்பா மனோஜ்க்கு வேலை கிடைத்துவிடும் முத்து பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுப்பார் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா அவர் இல்லாதப்ப அவர பத்தி பேசாதீங்க அவர் இருக்கும் போது பேசுங்க அதுக்கு அவர் பதில் சொல்லுவார் என கூறுகிறார்,.

உடனே விஜயா வந்து மீனாவை திட்ட ஆரம்பிக்கிறார் அது மட்டும் இல்லாமல் சுருதி நாங்கள் கேஷ்வலா தான் பேசிட்டு இருக்கோம் என கூறியும் விஜயா கேட்காமல் மீனாவை அதற்றுகிறார் அப்பொழுது ஏன் மகன் மனோஜ் டிரைவர் வேலை பார்க்க அவன் என்ன படிக்காதவனா அவன் நல்லா படிச்சிருக்கான் பெரிய வேலைக்கு போவான் முத்து மாரி டிரைவர் வேலைக்கு கேவலமா போக மாட்டான் என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து கேட்டு விடுகிறார்.

உறவாடி கெடுக்கும் மாயாவிற்கு பிரதீப் ஆண்டனி கொடுத்த பதிலடி… வைரலாகும் ட்வீட்…

உடனே டிரைவர் வேலையை இவ்வளவு கேவலமாக பேசுவீங்களா என முத்து கேட்கிறார் அப்பொழுது டிரைவர் வேலையை டிரைவர் என்று தானே சொல்ல முடியும் என விஜயா கூற அதற்கு மீனாவுக்கும் கோபம் வருகிறது உடனே முத்துவின் அப்பா விட்றா என்னையும் உங்க அம்மா கவர்மெண்ட் வேலைன்னு தான் சொல்லுவா எஞ்சின் டிரைவர்னு சொன்னதே கிடையாது என பேசுகிறார்.

உடனே முத்துவை நீ போய் உன் வேலையை பாருடா என முத்துவின் அப்பா கூறிவிடுகிறார் அடுத்த காட்சியில் சுருதியின் அம்மா போன் செய்து சீர் வைக்க வரலாமா என கேட்க வாங்க என கூறுகிறார் விஜயா. அடுத்த காட்சியில் முத்து அல்வா வாங்கிக் கொண்டு வந்து மீனாவுக்கு ஊட்டி விட்டு ரோகினியை வெறுப்பேற்றுகிறார். அதே போல் அடுத்த நாள் கேரள மேளத்துடன் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வருகிறார்.

உடனே வைர நக்லசை ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு கொடுக்க விஜய்யாவின் முகம் மாறுகிறது சந்தோஷத்தில் மிதக்கிறார் அடுத்ததாக மீனாவின் அம்மா சீர்வரிசை எடுத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது விஜயாவின் முகம் கோபமாக மாறுகிறது சொல்லிட்டு வர மாட்டீங்களா என திட்டுகிறார் வீணா போன முறுக்கு கோயம்பேட வாழைப்பழம் இதுதான் சீர்வரிசையா என நக்கலாக பேசுகிறார்.

சந்திரமுகி 2 பட இயக்குனர் என்னை தனியாக அழைத்து.. கதறி கதறி அழுத லட்சுமிமேனன்..

விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணி மனோஜ்  அம்மா பேசியதில் என்ன தவறு என கேட்க எனக்கு ஒரு தட்டாவது சீர்வரிசை வந்துச்சு உனக்கு என்ன ஒரு சொம்பு கூட வரலையா என முத்து மனோஜ்க்கு பதிலடி கொடுக்க அதை பார்த்துக் கொண்டிருந்த ரோகிணி கோவமாக மேலே எழுந்து செல்கிறார்.

மேலே போன ரோகிணியை சமாதானப்படுத்த விஜயா செல்கிறார் அப்பொழுது ரோகிணியிடம் உங்க அப்பாவ வர சொல்லு இதுக்கு எல்லாத்துக்கும் முடிவு கட்டிடலாம் உங்க வீட்ல இருந்து யாருமே வரலனா இப்படித்தான் பேசுவான் என பேசுகிறார் இதனால் ரோகிணி கண்ணீர் விட்டு அழுகிறார் இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.