ரவி காதலுக்கு ஆப்பு வைத்த குடும்பத்தினர்.! ஸ்ருதி என்ன செய்ய போகிறார் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

siragadikka Aasai
siragadikka Aasai

Siragadikka Aasai September 29 : இன்றைய எபிசோடில் பார்வதியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த விஜயா முத்து, மனோஜ் எல்லாரையும் கூப்பிட்டு நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருக்கேன், ரவிக்கு ஒரு பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று இருக்கிறேன்.. நான் முத்து முத்தாக மூன்று ஆம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேன் என்று சொல்ல முத்து அம்மா என்ன பத்தி தான் பேசுறாங்க..

ஆனா முத்துன்னு நான் ஒருத்தன் தானே இருக்கேன் என்று கேட்க உடனே விஜயா அப்படியா சொன்ன ஏதோ தெரியாம பேசிட்டேன் என்று  சொல்கிறார்.. அடுத்து ரவிக்கு வசதியான வீட்ல பொறந்து படிச்சி அழகா இருக்கிற பொண்ணா பாக்கணும் என்று விஜயா சொல்ல முத்து அண்ணாமலை இருவரும் வசதி என்பது காசு பணத்தில் இல்லை மனுஷங்க குணத்தில் தான் இருக்கு என்று சொல்லிவிட்டு நானும் ரவி கல்யாணத்தை பற்றி ஒரு யோசனை வச்சிருக்கேன்..

என்னோட பிரண்டு பரசு ஓட பொண்ண கேட்கலாமா என்று அண்ணாமலை சொல்கிறார். இதற்கு முத்து பரசு மாமா ரொம்ப நல்லவரு அவரோட பொண்ண கேட்கலாம் அப்பா நல்ல ஐடியா என்று சொல்கிறார்.. ஆனால் விஜயா நான் மனோஜ்க்கு ஒரு நல்ல குடும்பத்திலிருந்து பொண்ணு எடுத்த மாதிரி ரவிக்கும் நான் ஒரு பெரிய குடும்பத்திலிருந்து பொண்ணு பாக்கலாம்னு நெனச்சேன் அந்த பரசு ஓட பொண்ணு எல்லாம் வேண்டாம் என்று சொல்ல..

அண்ணாமலை முத்து எல்லோரும் அவரு ரொம்ப நல்லவரு அவரோட பொண்ணையே பார்க்கலாம் என்று அண்ணாமலை முத்துவிடம் நீ போய் பரசு கிட்ட பேசிட்டு வா என்று சொல்கிறார்.. அடுத்து மனோஜ் வேலைக்கு போற மாதிரி நடித்து பார்க்கில் போய் உட்கார்ந்து இருக்கிறார் அங்கு பக்கத்தில் இருப்பவரும் பொண்டாட்டி கிட்ட வேலைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு மனோஜ் மாதிரியே வந்து இருக்கிறார்.

இருவரும் வெட்டி கதை பேசிக் கொண்டிருக்கின்றனர்.. பிறகு முத்து பரசு வீட்டுக்கு போய் பேசிட்டு வீட்டுக்கு வந்ததும் சந்தோஷமாக எல்லோரையும் கூப்பிட்டு பரசு மாமா என்ன சொன்னாருன்னு உங்ககிட்ட அப்படியே சொல்றேன் என சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது