Siragadikka Aasai September 28 : இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் வீட்டு பத்திரத்தை இனி உன்ன நம்பி கொடுக்கிற மாதிரி இல்லை சொல்லிவிட்டு மீனா கையில் கொடுத்து உன் ரூம்ல பத்திரமா வச்சுக்கோ என சொல்கிறார்.. அதற்கு மீனா இது அத்தை கையிலேயே இருக்கட்டும் மாமா என சொல்ல..
விஜயா என் வீட்டு பத்திரத்தையே நீ எனக்கு கொடுக்க சொல்றியா என்ன மீனாவிடம் சண்டைக்கு போகிறார் பிறகு ரோகிணி தான் இந்த பத்திரத்தை மீட்டா அவ கையிலயாவது குடுங்க என கேட்க ஆனால் அண்ணாமலை மீனாவிடம் மட்டுமே கொடுத்துள்ளார்.. அடுத்து மீனாவிடம் விஜயா வாடகை வீட்டில் பிறந்து வளர்ந்த உன் கையில என் சொந்த வீட்டு பத்திரம் இருக்கு..
நீ நெனச்சத சாதித்துவிட்டாய் அல்லவா என்று கேட்க மீனா மாமா தான் கொடுத்தாரு வேணுமா இத நீங்களே வச்சுக்கோங்க எனக்கு இது மேல எல்லாம் ஆசை இல்லை என சொல்ல நீ கொடுத்து என் பத்திரத்தை நான் வாங்கணுமா அதை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.. அடுத்து ரெஸ்டாரண்டில் ரவியும், ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்..
இதனை வெளியில் இருந்து ஸ்ருதியோட அப்பா வாசுதேவனும் அம்மா சுதாவும் பார்த்து இவ அடங்கவே மாட்டாளா இவள அடிச்சு வீட்ல உட்கார வைக்கணும் என்று சுதா சொல்ல வாசுதேவன் அவ என்ன சின்ன குழந்தையா நம்ம சொல்றத கேக்குறதுக்கு அதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்..
அடுத்து விஜயா பார்வதியை பார்க்க அவங்க வீட்டுக்கு வந்திருக்கிறார் அங்கு வீட்டில் நடந்த எல்லா பிரச்சனையையும் பார்வதியிடம் சொல்ல மீனா பார்த்ததால் நல்லது நடந்திருக்கு, நீ கடன் வாங்குன விஷயம் தெரியப் போய் தானே ரோகிணி அவங்க அப்பாகிட்ட பேசினா கூடிய சீக்கிரம் அவங்க அப்பா வீட்டுக்கு வருவாரு எல்லாம் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்.
மேலும் பார்வதி ரவி கல்யாணத்த பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க என்று கேட்க எனக்கு என்னோட பிரண்டு வசந்தி பெரிய இடமா தான் கல்யாணம் பண்ணுனா அவ பொண்ணு தான் கேக்கணும், எப்படியும் ரவி நான் சொல்றதுக்கு சம்மதிப்பான்னு தான் நினைக்கிறேன் அந்த பொண்ண கேட்டு பாக்குறேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..