ரோகிணி வண்டவாளம் தெரியாமல் வாக்கு கொடுக்கும் விஜயா.. அசிங்கப்படுத்தும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai September 23
Siragadikka Aasai September 23

Siragadikka Aasai September 23 :  இன்றைய எபிசோடில் விஜயா வீட்டை அடமானம் வைத்ததால் பைனான்ஸ்யரிடம் அண்ணாமலை, முத்து, மனோஜ், ரவி எல்லோரும் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து விஜயாவை நிற்க வைத்து அண்ணாமலை வீட்டுக்கு தெரியாம எதுக்கு கடன் வாங்குன என்ன செலவு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது முத்து இவங்களை எல்லாம் இந்த மாதிரி கேட்க கூடாது சீட்டிங் பண்ணி இருக்காங்க, கோர்ட்ல நிக்க வச்சு கேக்குற மாதிரி தான் கேக்கணும் என்று டைனிங் டேபிளை தூக்கிட்டு வந்து நிமித்தி வைத்து அதில் விஜயாவை நிற்க சொல்லி இப்படித்தான் உங்கள எல்லாம் கேள்வி கேட்கணும் என்று..

அந்த பணத்தை என்ன பண்ணீங்க என கேட்க கல்யாண செலவுக்கு தான் கடன் வாங்கினேன் என விஜயா சொல்ல மீனா கல்யாணம் கோவில்ல நடந்தது பெருசா ஒன்னும் செலவு இருந்திருக்காதே என்று சொல்கிறார்.. பிறகு விஜயா மனோஜை பார்ப்பதும் முத்து அப்ப நீ மனோஜ்க்காக தான் கடன் வாங்கி இருக்கீங்க என்று கேட்கிறார்.

எல்லோரும் மாற்றி மாற்றி விஜயாவை கேள்வி கேட்பதால் நான் சொல்றேன் என்று, கல்யாணத்துக்கு முன்னாடி மனோஜ்க்கும் வேலை இல்ல ரோகினியும் வீடு வீடா போய் மசாஜ் பண்ணிட்டு இருந்தா அதனால ரோகினிக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பார்லர் வைக்கலாம்னு ஆசை இருந்தது .

அதனாலதான் வட்டிக்கு பணம் வாங்கி பார்லர் வச்சு கொடுத்தேன் என்று சொல்ல, ரவி நானும் தான் சொந்தமா ரெஸ்டாரன்ட் வக்கலான்னு இருந்தேன் ஆனா அதுக்கு அப்பாகிட்ட பணம் கேட்டு கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நானே லோனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க, மனோஜ் மட்டும் தான் உங்க பையனா அவனுக்கு மட்டும் எல்லாம் பண்றீங்க என்று கேட்கிறார்.

பிறகு முத்து மீனாவும் நல்லா பூ கட்டுவா கோயம்பேட்டில் ஒரு பெரிய பூக்கடையாக வச்சு குடுங்க, அதுக்கு ஒரு பத்து லட்சம் திரும்ப நம்ம வீட்டு மேல கடன் வாங்கலாம், ரவி ரெஸ்டாரண்டுக்கும் பத்து லட்சம் கடன் வாங்கலாம். ஆக மொத்தம் இன்னும் 20 லட்சம் அந்த வீட்டுக்கு கடன் வாங்கி கொடுங்க என்று கேட்கிறார்..

அதற்கு விஜயா ரோஹினி பார்லர்ல சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் நம்ம கிட்ட தானே கொடுக்கிறா, இந்த வட்டி படத்தையும் அவ தான் மாசம் மாசம் கட்டிக்கிட்டு வரா என்று சொல்ல, முத்து அப்ப ஏன் ரெண்டு மாசமா வட்டி கட்டளை என்று கேட்கிறார்.. கடைசியாக விஜயா முத்துவிடம் உனக்கு என்ன பணம் தானே இப்ப பிரச்சனை..

இன்னும் நாளே நாள்ல மொத்தம் 17 லட்சம் பணமும் வந்து சேரும் ரோகிணி கொடுத்துருவா என்று சொல்கிறார், ஆனால் ரோகிணி ஆன்ட்டி அதுக்குள்ள எப்படி முடியும் வேணாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் விஜயா நாளே நாளில் பணம் உனக்கு வரும் என அடித்து சொல்லி இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது…