Siragadikka Aasai september 21 : இன்றைய எபிசோடில் விஜயா ரோகிணிக்கு போன் பண்ணி மலேசியாவில் இருந்து உங்க தாய் மாமா வசீகரன் பேசினார் உங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம், எப்படியும் கூடிய சீக்கிரம் நம்ம எல்லோரும் மலேசியாவுக்கு போற மாதிரி இருக்கும் என்று சொல்கிறார் இதற்கு ரோகினி யாரு பேசியிருப்பாங்க..
ஒண்ணுமே புரியலையே என யோசிக்கிறார்.. பிறகு விஜயா வீட்டிற்கு ரெண்டு பேர் வருகின்றனர் அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்க பைனான்ஸ் கம்பெனியிலிருந்து வந்திருக்கும் வட்டி கட்டளையா என கேட்கின்றனர் அதற்கு விஜயா நீங்க போங்க நான் பின்னாடியே பணம் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல.. அவர்கள் சரி நீங்க வாங்க, கொஞ்சம் தண்ணி கொடுங்க என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது அண்ணாமலை அங்கு வந்து யார் இவங்க என்னவென கேட்க வீடு ஏதாவது வாடகைக்கு இருக்கான்னு கேட்டாங்க, இல்லன்னு சொன்னதும் தண்ணி கேட்டாங்க அதான் வேற ஒன்னும் இல்லையென்று சமாளிக்கிறார். பிறகு ஒரு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு விஜயா பார்வதியை பார்த்துட்டு வரேன் என வீட்டில் பொய் சொல்லி விட்டு வட்டி கட்ட ஆட்டோவில் போகிறார்.
அடுத்து சிட்டி என்பவர் சத்யாவிடம் நீ பணத்தை எடுக்காமலே உன்னை அசிங்கப்படுத்தினாங்க இல்ல, இப்ப அந்த பணத்தை நம்ம திருட போறோம் உங்க அத்தை எனக்கு தெரிஞ்ச ஆட்டோல வடிகட்ட தான் போயிட்டு இருக்காங்க, நான் அந்த ஆட்டோக்காரன் கிட்ட பேசிட்டேன் என்று சொல்ல சத்தியா ஒரு தடவை திருடனதே போதும் இனிமே இந்த பழக்கம் வேண்டாம் என்று முதலில் சொல்கிறார்.
பிறகு அந்த சிட்டி பேச்சை கேட்டு சத்தியா சிட்டியுடன் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியில் போய் விஜயாவின் ஹேன் பேக்கை திருடி அதில் பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பேக்கை தூக்கி போட்டு விட்டு போய்விட்டார். விஜயா என் பணத்தை திருடிட்டு போயிட்டாங்க என்று கத்திவிட்டு பிறகு பைனான்ஸ் கம்பெனிக்கு போய் வர வழியில என் பணத்தை ரெண்டு பேர் திருடிட்டு போயிட்டாங்க..
இப்ப என்கிட்ட பணம் இல்லை என்று சொல்ல, அவர்கள் எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு இந்த கதை எல்லாம் என்கிட்ட சொல்ல வேணாம் இவங்கள புடிச்சு கூண்டில் போடு என சொல்வதும் ஒரு பெண் விஜயாவை இழுத்துட்டு போய் கூண்டில் போடுகின்றனர்.. என்ன பண்ணுவது என தெரியாமல் விஜயா முழிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.