ரோகினி -யிடம் உண்மையை சொல்ல பார்க்கும் மனோஜ்! தடுக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

siragadikka aasai
siragadikka aasai

Siragadikka Aasai september 19  : இன்றைய எபிசோடில் முத்து எல்லோரும் சேர்ந்து ஹனிமூன் போகலாம் அந்தமானுக்கு டிக்கெட் போடு என்று மனோஜிடம் சொல்ல விஜயா எல்லோரும் சேர்ந்து போக பொருட்காட்சியா போறோம், ஹனிமூன் தான் மனோஜ் ரோகினி மட்டும் போகட்டும் என்று சொல்கிறார்.

அதற்கு அவன் மட்டும் போகணும்னா அவன் காசுல போகணும், அப்பா காசுல தான போறான் அப்ப எல்லாருக்கும் டிக்கெட் போடட்டும் என்று முத்து திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருக்க ரோகிணி கோவப்பட்டு உங்களுக்கு என்ன இப்ப காசு தானே தேவை இந்த மாசம் மொத்த சம்பளமும் எனக்கு வந்துரும், மனோஜ்க்கும் இன்னும் ரெண்டு நாள்ல சம்பளம் வந்துரும் டிக்கெட் போட்ட காச தந்துவிடுகிறோம் என்று சொல்ல..

விஜயா இப்ப டிக்கெட் கேன்சல் பண்ணி காசு கொடுத்துடுங்க, அப்புறம் போய்க்கலாம் என்று சொல்கிறார் அடுத்து மனோஜ் விஜயாவிடம் ரோகினி சம்பள பணம் கேட்டுட்டே இருக்கா என்ன சொல்றது பேசாம வேலை போயிடுச்சுன்னு சொல்லிட்டா என்று கேட்க, நீ இப்ப வேலை போச்சுன்னு சொன்னேனா அப்ப அந்த ஒரு லட்சம் பணத்தை எடுத்தது நீதான்னு நினைச்சிடவா..

அதெல்லாம் சொல்லாத வேற வேலை தேடு எந்த மாதிரி வேலையா இருந்தாலும் பரவாயில்லை என்று விஜயா மனோஜிடம் சொல்கிறார்.. அடுத்து ரெஸ்டாரண்டில் ரவியும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.. அங்கு பக்கத்தில் இருந்த ஒரு ஜோடி ஜாலியாக அடித்துக் கொண்டு பேசிக்கிட்டே சாப்பிடுகின்றனர்..

அவர்களைப் பார்த்து ரவி ஸ்ருதியிடம் என்னோட ரெகுலர் கஸ்டமர் தான் அவுங்க கல்யாணம் எல்லாம் பண்ணிக்கல ஆனால் லிவிங் டு கெதர் ல இருக்காங்க, இத பத்தி நீ என்ன நினைக்கிற என்று ஸ்ருதியிடம் கேட்க, கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்ச நாள் நல்லா பாத்துப்பாங்க அப்புறம் அன்பு குறைந்துவிடும் லிவிங் ல இருக்கும்பொழுது நமக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கும்.

அதனால நல்லா பாத்துப்பாங்க என்று சொல்கிறார் அதற்கு ரவி உனக்கு லிவிங் ஓகேவா என்று கேட்க, லிவ்விங்கு நான் சப்போர்ட் பண்ணுவ ஆனா எனக்கெல்லாம் செட் ஆகாது.. அந்த மாதிரி ஆசை இருந்தா நீயும் மறந்திடு என்று சொல்கிறார் பிறகு மனோஜ் முத்துவ வெளிய வா என்று கூப்பிட்டு நான் அப்பாவோட பணத்தை எடுத்துட்டேன்னு தானே எல்லாரும் என்னை திட்டினீங்க..

அந்த பணத்தை நான் திரும்பிக் கொடுக்க வந்திருக்கேன் என்று சொல்வதும் முத்து பரவாயில்லையே எங்களுக்கு சேர வேண்டிய 27 லட்சத்தை இவ்வளவு சீக்கிரம் ரெடி பண்ணிட்டியே சூப்பர் அண்ணா என்று சொல்லி கைதட்ட, அம்மா கிட்ட இருந்து எடுத்த ஒரு லட்சம் பணத்தை தான் கொடுக்க வந்திருக்கிறேன் என்று சொல்லி விஜயா கையில் பணத்தை கொடுக்கிறார்.

அப்பொழுது முத்து அந்த பணத்தை வாங்கி ஒரு லட்சம் சரியா இருக்கா என்று முத்துவும் ரவியும் எண்ணிப் பார்க்கின்றனர் அதில் 4000 குறைகிறது அதனை மனோஜிடம் கேட்க டிக்கெட் கேன்சல் பண்ண இடத்தில் அந்த பணத்தை புடிச்சுக்கிட்டாங்க நான் அதை கூடிய சீக்கிரம் தந்திடுறேன் என்று மனோஜ் சொல்கிறார்..

பிறகு மீனா இந்த பணத்தை என் தம்பி தான் எடுத்துட்டான்னு சொல்லி என் குடும்பத்தை எவ்வளவு அசிங்க படுத்துறீங்க அது இனி மாறுமா என்று கேட்க, அதுக்கு தான் நான் மன்னிப்பு கேட்டுட்டேனே விடு என்று விஜயா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..