உன் சின்ன புள்ள ரவி பெரிய மன்மதனா இருப்பான் போல.. விஜயாவிடம் போட்டு கொடுத்த பார்வதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai September 18
Siragadikka Aasai September 18

Siragadikka Aasai September 18 :  இன்றைய எபிசோடில் மீனா காலையில் எழுந்து தலை குளிச்சிட்டு வராங்க அதை பார்த்து விஜயா போற போக்க பார்த்தா இவ சீக்கிரம் குழந்தை பெத்துடுவா போல என்று நினைக்கிறார். அடுத்து மனோஜ் ரொம்ப லேட்டா தூங்கி எழுந்திருச்சு வருகிறார்..

ரோகினியும் நைட் அக்கவுண்ட்ஸ் பாத்துட்டு இருந்தா அதான் தூங்க லேட் ஆயிடுச்சு இப்பதான் எழுந்தேன் என்று சொல்ல விஜயா ரெண்டு பேரும் என்ன இப்படி இருக்காங்க என்று நினைத்து வருத்தப்படுகிறார் பிறகு ரவி ரெஸ்டாரன்ட் போற வழியில் சீதா பூக்கூடையோடு சைக்கிள் தள்ளிட்டு வரதை பார்த்து என்ன என்று கேட்க சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சு ரெண்டு வீட்டுக்கு பூ வரே கொடுக்கணும்..

கோவிலுக்கு போகணும் என்று சொல்ல சைக்கிள் இங்க ஓரமா நிறுத்திட்டு வா நான் பைக்ல அழைச்சிட்டு போய் விடுகிறேன் என்று ரவி சீதாவை வண்டியில் அழைத்துக் கொண்டு போகிறார்.. இதை தூரத்தில் இருந்து பார்வதி பார்த்து விட்டு உடனே விஜயாவுக்கு போன் பண்ணி உன் சின்ன பையன் ரவி தான் என்று பார்வதி சொல்ல ரவி ரெஸ்டாரண்டுக்கு போயிருக்கான்.

என்னவென்று விஜயா கேட்க உன் பையன் பெரிய மன்மதனா இருப்பான் போல பர்ஸ்ட் வெள்ளைக்கட்டி மாதிரி ஒரு பொண்ணு ரவி கூட பைக்ல நெருக்கமா போச்சு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தா வேற ஒரு பொண்ண பைக்ல அழைச்சிட்டு போறான் என்று கேட்க.. விஜயா அந்த பொண்ணு எல்லாம் நல்லா இருக்குமா பெரிய இடம் மாதிரி தெரிஞ்சுதா என்று கேட்கிறார் அதற்கு பார்வதி முதல்ல பார்த்த பொண்ணு யாருன்னு தெரியல..

இரண்டாவதா ரவி சீதாவை வண்டியில் அழைத்துக் கொண்டு போனான் என்று சொல்ல.. சீதா வா என்று விஜயா ஷாக் ஆகி ரவி வரட்டும் கண்டிக்கிறேன் என்று சொல்ல இந்த காலத்து பிள்ளைகளிடம் ஏதாவது சொன்னா தான் அதையே திரும்பி செய்வாங்க கூடிய சீக்கிரம் ரவிக்கு ஒரு பொண்ண பாத்து கட்டி வச்சிரு என்று பார்வதி சொல்கிறார் பிறகு ரோகினி மனோஜ் கிட்ட எப்படி அத்தை உன்கிட்ட பணம் கொடுத்ததை நீயும் மறந்த அவங்களும் மறந்தாங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதை பார்த்த விஜயா நான் தான் அவன் கிட்ட பணத்தை கொடுத்துட்டு மறந்துட்டேன் இதான் உண்மை என்று சொல்கிறார்.. அடுத்து முத்து அய்யய்யோ நைட்டு இந்த மாதிரி நடந்துடுச்சு இது நடக்க கூடாதுன்னு நினைச்சேன் என்று புலம்புகிறார். அதனால் அவங்க அப்பா அம்மாவை கூப்பிட்டு இனிமே இந்த வீட்ல சண்டை வரக்கூடாது அப்படி சண்டை வந்தா எனக்கு தான் அது பிரச்சனை நீங்க சண்டை போட்டு போயிட்டீங்க..

அதனால நைட்டு எனக்கு தான் பிரச்சனை என்று யாருக்கும் ஒன்றும் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.. அடுத்து மனோஜ் கிட்ட நீங்க மட்டும் தான் அந்தமானுக்கு ஹனிமூன் போவீங்களா நாங்களும் வருவோம் எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க எல்லோரும் போயிட்டு வரலாம் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது…