மனோஜை காப்பாற்ற நாடகமாடும் விஜயா.. சிவாஜி , சாவித்திரி எல்லாம் இப்ப இருந்தா மயங்கி விழுந்து இருக்காங்க கிண்டல் பண்ணும் முத்து

Siragadikka aasai September 15
Siragadikka aasai September 15

Siragadikka Aasai September 15 : இன்றைய எபிசோடில் முத்து ஒரு லட்சம் பணத்தை எடுத்தது மனோஜ் தான் என்று ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு மனோஜிடம் எல்லோரும் ஏன் இப்படி பண்ண என கேட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்போது விஜயா நான் மறந்தே போயிட்டேன் ஐயோ ஐயோ எப்படி மறந்தேன் நான் தான் மனோஜ் கிட்ட டிக்கெட் புக் பண்ண அந்த பணத்தை கொடுத்தேன்.

நானே மறந்துட்டேன் நீயாவது என்கிட்ட சொல்லி இருக்க கூடாதா மனோஜ் என்று நாடகம் போடுகிறார்.. இதைப் பார்த்து பொய் என்று நினைத்து முத்து மட்டும் என்னம்மா இப்படி நடிக்கிறீங்க நல்லவேளை சாவித்திரி, சிவாஜி எல்லாம் செத்துட்டாங்க அவங்க எல்லாம் இருந்திருந்தா உங்க நடிப்பை பார்த்து மயங்கி இருப்பாங்க என்று கிண்டல் பண்ணுகிறார்

பிறகு அண்ணாமலை விஜயாவிடம் செய்யாத தப்புக்கு அவங்கள கூப்பிட்டு எவ்வளவு அசிங்கப்படுத்தின மன்னிப்பு கேளு என்று சொல்ல, நான் தான் மனோஜ் கிட்ட பணத்தை கொடுத்துட்டு மறந்துட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று மீனா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு முத்து சத்யாவிடமும் இந்த மாதிரி நடந்ததால இங்க வராம இருக்காத நீ எப்பவும் போல இங்க வரலாம் என்று சொல்ல பிறகு மீனாவின் அம்மா, தம்பி, தங்கச்சி மூன்று பேரும் வீட்டுக்கு போகின்றனர்.

விஜயா மனோஜை தனியாக ரூமில் கூப்பிட்டு போய் செவிலில் இரண்டு அரை விட்டு சொந்த வீட்டிலேயே திருடுறியேடா என்கிட்ட கேட்டு இருந்தா நானே கொடுத்து இருப்பேன் ஏன்டா இப்படி பண்ண என்று கேட்க எனக்கு வேற வழி தெரியலமா நான் வேலை பார்த்த இடத்துல போய் பணம் கேட்டேன் அவங்க தரல அதனாலதான் இந்த பணத்தை எடுத்துட்டேன் உன்கிட்ட சொல்லனும் என்று தான் நினைச்சேன் அதுக்குள்ள மீனா வீட்டில் இருந்து வந்துட்டாங்க அப்புறம் சொல்ல முடியல என்று சொல்கிறார்.

இப்ப நான் ஏதோ சொல்லி சமாளிச்ச இல்லன்னா முத்து உன்ன என்ன  அடித்து இருப்பார் ரோகிணி உன்னை பற்றி என்ன நினைச்சிருப்பா இந்த மாதிரி இனிமே நடந்துக்க கூடாது என்று சொல்கிறார்.. அடுத்து மீனா நடந்தவற்றை நினைத்து ரூமில் அழுது கொண்டிருக்கிறார் அதற்கு முத்து ஏன் அழுகிறாய் என்று கேட்க எங்க அம்மா எவ்வளவு அசிங்கப்பட்டு போனாங்க, நாங்க பூ கட்டற குடும்பம் ஏழை குடும்பம்னு தான எங்களை ரொம்ப இளக்காரமா நடத்துறாங்க..

இதுவே ரோகினி அவங்க அப்பா மலேசியால இருக்கறதால அவங்களுக்கு ஒரு தனி மரியாதை கொடுக்குறாங்க அத்தை என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.. பிறகு எங்க அம்மா இனிமே எப்படி இங்க வருவாங்க என்று கேட்க நான் தான் இருக்கள எனக்காக அவங்க வருவாங்க என்று முத்து சமாதானப்படுத்துகிறார் பிறகு ரவி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு ஸ்டுடியோவில் விட்டு விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது பார்வதி ரவியை பார்த்து இவன் என்ன இந்த பொண்ணு கூட பேசிகிட்டு இருக்கான் என்று நினைக்கிறார்.. பிறகு அடுத்த நாள் காலையில் மீனா எழுந்திருக்க லேட்டாகுது விஜயா இன்னும் டீ போடலையே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனா ரூமில் இருந்து தலை குளித்துவிட்டு வெளியே சிரித்து கொண்டு வருகிறார்.. அதைப் பார்த்து போற போக்க பாத்தா இன்னும் கொஞ்ச நாள்ல இவ குழந்தை பெற்றுவிடுவாள் என்று நினைக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..