Siragadikka Aasai september 15 : மீனாவிடம் உன் தம்பிய ஒழுங்கா பணத்தை எடுத்துட்டு வந்து குடுக்க சொல்லிடு, இல்லனா போலீசுக்கு போன் பண்ணுவேன் என்று சொல்ல முத்து நீங்க போலீசுக்கு போன் பண்ணுங்க சத்யா பணம் எடுத்து இருக்க மாட்டான் எனக்கு நம்பிக்கை என்று சொல்லி விட்டுப் போகிறார்..
பிறகு விஜயா மீனா அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி உன் பையன் சத்யா இங்க வந்ததுல இருந்து எங்க வீட்ல ஒரு லட்சம் பணம் காணும் ஒழுங்கா அந்த பணத்தை எடுத்துட்டு வந்து திரும்பி குடுத்துடுங்க இல்லன்னா அரை மணி நேரத்துல போலீஸ் உங்க வீட்டுக்கு வரும் என்று மிரட்டி விட்டு போனை வைக்கிறார்.
இதைக் கேட்டு பதறி போன மீனாவின் அம்மா சத்யாவை பார்த்து நீ ஒரு தப்பு பண்ணது இப்ப எவ்வளவு பிரச்சனை அவங்க வீட்ல பணத்தை காணுமா? நீ தான் எடுத்தன்னு சொல்றாங்க என்று சொல்வதற்கு சத்யாவும் சீதாவும் எப்படி சத்யா மேல அவங்க வீண் பழி சொல்லலாம் என்று கோபப்படுகின்றனர் பிறகு மூன்று பேரும் விஜயா வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர்.
அங்கு வந்தது மீனா நீ இங்க ஏம்மா வந்த முதல்ல நீ வீட்டுக்கு போ என்று சொல்ல விஜயா நான் தான் போன் பண்ணி அவங்கள வர சொன்னேன் என்ன சும்மா வந்து இருக்கீங்க ஒரு லட்சம் பணம் எங்க என்று கேட்க சத்யா நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன் நான் ஏதும் பணம் எடுக்கல என்று சொல்கிறார் பிறகு முத்துவும் சத்யா மற்றும் சீதாவிடம் நீங்க ஏன் காலேஜ் போகாம இங்க வந்து இருக்கீங்க என்று கேட்கிறார்.
அதற்கு மீனா தம்பி பணம் எடுக்கலைன்னு சொல்லியும் இவங்க போன் பண்ணி இருக்காங்க என்று விஜயாவை சொல்ல முத்து தெரியும் இவங்க இந்த மாதிரி ஏதாவது பண்ணுவாங்க என சொல்கிறார்.. அந்த நேரத்தில் மனோஜ் புக் பண்ண டிக்கெட் எடுத்துட்டு ஒருவர் வந்து வந்து மனோஜிடம் டிக்கெட்டை கொடுத்து விட்டு எங்க ஆபீஸ்ல 10% டிஸ்கவுண்ட்.
அதனால நீங்க கொடுத்த பணத்துல 8000 உங்களுக்கு மீதி இருக்கு என்று திருப்பி கொடுக்கின்றனர், அப்பொழுது எல்லோரும் என்ன டிக்கெட் என்று கேட்க நாங்கள் ஹனிமூன் போக அந்தமானுக்கு மனோஜ டிக்கெட் புக் பண்ண சொன்ன அதான் என்று ரோகினி சொல்கிறார். உடனே மனோஜ் திருதிருவென முழித்துக் கொண்டு டிக்கெட்டை வாங்கி விட்டு ரூமுக்கு போகிறார்.
முத்து எங்க உள்ள போற நில்லு என்று அந்த பணம் இருக்கும் கவரை பார்த்து இந்தக் கவர் அப்பாவுக்கு வாசுதேவன் ஒரு லட்சம் பணம் கொடுத்த கவர் தானே என்று முத்து கண்டுபிடித்து அப்பா கொடுத்த கவர் இப்ப மனோஜ்கையில் இருக்கு யாரு பணத்தை திரண்டதுன்னு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா என எல்லோரிடமும் சொல்கிறார்..
உடனே சத்யாவின் அம்மா நாங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் எங்களுக்கு திருடிலாம் பிழைக்க தெரியாது இப்ப பணத்தை திருடனது யாருன்னு தெரிஞ்சுச்சா என்று வருத்தமாக பேசுகிறார்.. மனோஜ் ரோகினி விஜயா மூன்று பேரும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆடிப் போய் நிற்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..