சீதாவை அனுப்பி வைக்க முடியாது.? இந்த சம்பந்தம் எனக்கு வேண்டாம் முத்து மூஞ்சில் அடித்த மாதிரி பேசிய மாமியார் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai October 07
Siragadikka Aasai October 07

Siragadikka Aasai October 7 : இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் ரவியோட பிரண்டு ஸ்ருதி வீட்டுக்கு வந்தாங்க, அவங்க என்கிட்ட நானும் ரவியும் லவ் பண்றோம் நான் ரவியை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொன்னாங்க என சொன்னவுடன் முத்துக்கு செம்ம கோவம் வந்து அந்த பொண்ணு கூட நான் பேச கூடாதுன்னு சொல்லி இருந்தேன் லவ் பண்றானா ரவி, அந்த வாசுதேவன் அப்பாவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்.

அவருடைய பொண்ணு நமக்கு தேவையில்லை என்று சொல்கிறார் பிறகு மீனா ரெண்டு குடும்பமும் சேர்ந்து பேசினா அந்த பிரச்சனை சரியாகி கல்யாணம் நடந்தாலும் நடக்கும் வீட்ல சொல்லலாமா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என மீனாவும் முத்துவும் ரவியை பார்க்க ரெஸ்டாரண்டுக்கு போய் ரவியிடம் அந்த பொண்ணு கிட்ட இன்னும் நீ பேசிட்டு தான் இருக்கியா..

லோகேஷுக்கும், விஜய்க்கும் என்ன பிரச்சனை.? ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? உண்மையை சொன்ன லலித்குமார்

நான்தான் ஏற்கனவே வாசுதேவன் பொண்ணு கிட்ட பேச கூடாதுன்னு சொல்லி இருந்தேனே என்ன ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா, அவர் நம்ப அப்பா பென்ஷன் பணத்தை தராமல் கோர்ட்டுக்கு இழுத்து அடிச்சு எவ்வளவு அசிங்க படுத்தினார் அவரு பொண்ணோட சவகாசம் நமக்கு தேவையா..

வீட்டுக்கு வந்து உன்ன லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லி இருக்கு அவ்வளவு திமிரா அதுக்கு என்று சொல்ல ரவி ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா என்று சொல்கிறார், ஆனால் முத்து அந்த பொண்ண எல்லாம் மறந்துரு அதான் உனக்கு நல்லது இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

பிறகு நடு ராத்திரியில் முத்து மீனாவை எழுப்பி நாளைக்கு ரவி கல்யாண விஷயமா ஒரு இடத்துக்கு போகணும் காலைல கிளம்பிடு என்று சொல்கிறார் அதைப்போல அடுத்த நாள் காலையில் முத்துவும் மீனாவும் காரில் போய் கொண்டிருக்கின்றனர், மீனா எங்க போறேன்னு சொல்லுங்க என்று கேட்க அதெல்லாம் அப்புறம் சொல்றேன் நீ பேசாம வா என்று போற வழியில் பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு மீனா வீட்டிற்கு தான் போகிறார்.

பிக்பாஸ் சீசன் 7-ல் முதல் போட்டியாளராக வெளியேறப் போவது இவர்தானா.?

உடனே மீனா என்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க உள்ள வா சொல்றேன் என்று உள்ளே போனதும் மாமியாரிடம் அத்தை ஒரு தாம்பாள தட்டு குடுங்க என்று தட்டை வாங்கி அதில் பூப் பழத்தை எல்லாம் வைத்து என் தம்பி கேட்டரிங் படித்து இருக்கான் ரெஸ்டாரன்ட்ல வேலை செய்கிறான் அவன் உங்க பொண்ண நல்லா பாத்துப்பான், சீதாவை ரவிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமா என்று கேட்கிறார்.

இதை கேட்டு ஷாக் ஆகி மீனாவுடைய அம்மா ரவியும் சீதாவும் பேசினாவே உங்க அம்மா என்ன செலவில்லாம இங்க தள்ளிவிட்டுடலாமுன்னு பாக்குறியான்னு தப்பா பேசுவாங்க, நாங்க ஏழை என்கின்றதால் மீனாவையே அவங்க என்ன என்ன சொல்லுவாங்க அதனால சீதாவை அனுப்பி வைக்க முடியாது இந்த சம்மதம் எனக்கு வேணாம் மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது..