Siragadikka Aasai October 6 : இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி உடைய பார்லருக்கு வந்திருக்கிறார். அப்பொழுது கிரீன் பிராண்ட் ஓனரும் அங்கு வருவதால் விஜயாவை உள்ளே உட்கார வைத்து வித்யாவை மசாஜ் செய்ய சொல்லிவிட்டு ரோகிணி அந்த மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
பிறகு ரோகிணி வித்யாவிடம் இப்படி எல்லாத்தையும் மறைச்சு நடிச்சு வாழ வேண்டியதா இருக்கு கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும் போல என்று சொல்ல வித்யா இதுக்கு ஒரே வழி தான் இருக்கு மனோஜை கூட்டிட்டு தனியா போயிட்டேனா அதிக பிரச்சனை இருக்காது என்று சொல்கிறார், அதற்கு ரோகிணி அத்தை எனக்காக நிறைய பண்ணி இருக்காங்க..
அவங்கள விட்டுட்டு தனியா போகவும் எனக்கு மனசு வரல என்று யோசிக்கிறார் பிறகு ஸ்ருதி ரவி வீட்டுக்கு வந்து மீனாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல மீனா ரூமில் அழைத்துக் கொண்டு தனியாக என்னவென கேட்கிறார். ஸ்ருதி நானும், ரவியும் கொஞ்ச நாளா லவ் பண்றோம் எங்க வீட்லயும் எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்குறாங்க..
அதனால நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல மீனா ஷாக் ஆகி என்னது லவ்வா என்று கேட்கிறார் பிறகு மீனாக்கு அந்த வாசுதேவனின் பொண்ணு தான் ஸ்ருதி என்று தெரிந்ததும் அப்ப கண்டிப்பா இதுக்கு எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்கிறார் ஆனால் ஸ்ருதி நீங்கதான் எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும் உங்களை நம்பி தான் இருக்கேன் என மீனாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
பிறகு ஸ்ருதி வீட்டுக்கு போனதும் அவங்க அப்பா அம்மா என்ன நீ பாதியிலேயே எழுந்து வந்துட்ட உனக்கும் விச்சுக்கும் நாங்க கல்யாணம் கன்ஃபார்ம் பண்ணிட்டோம் என்று சொல்ல ஸ்ருதி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என சொல்கிறார் அதற்கு நீ அந்த ரவிய லவ் பண்றியா, அந்த அண்ணாமலை உங்க அப்பாவா அசிங்கப்படுத்தினவரு என்று சொல்ல சுருதி அதெல்லாம் உங்க பிரச்சனை என சொல்கிறார்.
பிறகு மீனா முத்து வீட்டுக்கு வந்ததும் ரவியோட பிரண்டு ஸ்ருதி வீட்டுக்கு வந்தாங்க, ரவியும் அவங்களும் லவ் பண்றாங்களாம் என்று முத்துவிடம் சொல்ல முத்து என்னது லவ்வா அந்த பொண்ணு கூட பேசவே கூடாது என ரவி கிட்ட சொல்லி இருந்த, இந்த ரவி வரட்டும் என கோபமாக இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.