அண்ணாமலையை அசிங்கப்படுத்திய பெண் வீட்டார்கள்.! ஓடோட விரட்டிய முத்து.. தலையில் அடித்துக் கொள்ளும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai october 04
Siragadikka Aasai october 04

Siragadikka Aasai October 4 : இன்றைய எபிசோடில் விஜயாவுடைய தோழி தனலட்சுமி என்பவர் அவருடைய பொண்ணுக்கு ரவியை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கிறார்.. அப்பொழுது விஜயா அவர்களிடம் என் பெரிய பையன் மனோஜ் கார் ஒர்க் ஷாப்ல ஒரு பார்ட்னரா இருக்கான், பெரிய மருமகள் ரோகினி சொந்தமா பார்லர் வச்சிருக்கா என்று பொய் சொல்கிறார்.

அதைப்போல் அவர்கள் முத்துவைப் பார்த்து இது யாரு என்று கேட்க அவன் என் இரண்டாவது பையன், அவன் சொந்தமா நிறைய கார் ஆப்பரேட் பண்ணிட்டு இருக்கான் சென்னையில அவனுக்கு நிறைய கார் ஓடுது என்று சொல்கிறார் பிறகு ரவியையும் என் சின்ன பையன் ரவி ஃபாரின்ல போய் குக்கிங் படிச்சிட்டு வந்து இப்ப டிரெய்னிங்க்கு ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு போயிட்டு இருக்கான் என்று அடுக்கடுக்காக விஜயா பொய் சொல்கிறார்.

பிறகு தனலட்சுமி விஜயாவிடம் நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத இனிமே நம்ம சொந்தமாக போறோம் அதனால தான் கேட்கிறேன், ஓ ரெண்டாவது மருமகள் ஏதோ கோவில் வாசல்ல பூக்கடை வச்சிருக்கிதா கேள்விப்பட்டேனே என்று கேட்க, ஆமா ஆனா சின்ன பூ கடை இல்லை பெரிய பிளவர் ஷாப், நிறைய கடை இருக்கு அதுல ஒரு பிரான்ச் தான் கோவில் வாசல்ல இருக்கு என்று பொய் சொல்ல உடனே முத்து அவங்க சொல்றது உண்மை இல்லை..

மீனா கோவில் வாசல்ல சொந்தமா ஒரு சின்ன பூ கடை தான் வச்சிருக்கா, ஏம்மா பொய் சொல்றீங்க என்று கேட்க பிறகு அவ எப்படி இந்த வீட்டுக்கு வந்தா என்ற உண்மையை சொல்லட்டா என்று என் புருஷன் ட்ரெயின் முன்னாடி ஒரு வீணா போனவன் வந்து விழுந்துட்டான் அதனால அவரோட பொண்ண இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொண்டு வந்துட்டாரு..

இதையெல்லாம் சொல்லனுமா என்று தான் சொல்லவில்லை என விஜயா சொல்ல உடனே அந்த தனலட்சுமி அவரது வீட்டு காரரும் அப்ப இது பரிதாப கல்யாணமா ஏன் சார் இதுக்கெல்லாம் இறக்கப்பட்டு அவங்க வீட்டு பொண்ண கூட்டிட்டு வருவீங்களா ரொம்ப முட்டாளா இருக்கீங்க உங்களுக்கு புழைக்கவே தெரியல என்று அண்ணாமலையை திட்டுவதும் உடனே முத்துவிற்கு கோபம் வந்து எங்க அப்பாவே இப்படி பேசுவியா எழுந்திருடா என அவரது சட்டையை பிடிக்கிறார்..

உடனே ரவியும் எப்படி எங்க அப்பாவ மரியாதை இல்லாம பேசலாம் நீங்க பேசறது ரொம்ப தப்பு என்று சொல்கிறார்.. உடனே தனலட்சுமி என்ன உன் பையன் எப்படி ரவுடித்தனம் பண்றான் எங்களுக்கு இந்த சம்பந்தமே வேணாம் நாங்க கிளம்புறோம் என்று போகின்றனர் அப்போது முத்து சாப்பிட்ட பஜ்ஜிக்கு காசு கொடுத்துட்டு போ என்று கேட்க அவர்களும் முத்துவிடம் காசை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

இன்னொரு பக்கம் விச்சு வீட்டில் ஸ்ருதி மற்றும் விச்சு உடைய பெற்றோர்கள் அவர்கள் கல்யாணத்திற்காக தட்டு மாற்றிக் கொள்கின்றனர்… பிறகு விஜயா மீனா விடம் முத்துவை இதுக்கு தான் வீட்ல இருக்க வேணாம்னு சொன்ன ஆனா நீ தான் அவனை வீட்ல இருக்க வச்சு இவ்வளவு பிரச்சனை பண்ணி இருக்க எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று மீனாவை திட்டுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..