Siragadikka Aasai october 03 : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயா ரவியிடம் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன் அவங்க வீட்ல இருந்து இன்னைக்கு வராங்க நீ வீட்டிலேயே இரு ரெஸ்டாரன்ட் போக வேண்டாம் என்று சொல்கிறார். அப்பொழுது முத்து யாரா இருந்தாலும் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கிறவங்களா இருக்கணும்.
அப்பதான் இந்த கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறார்.. இதை போல் ஸ்ருதி வீட்டிலும் அவருடைய சின்ன வயசு நண்பர் காளிதாஸ் என்பவர் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்.. அங்கு போனதும் மாப்பிள்ளை யோட அப்பா அம்மா ஸ்ருதியை பார்த்துவிட்டு எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்கின்றனர்.
அப்பொழுது தான் ஸ்ருதிக்கு தெரிகிறது நம்மள பொய் சொல்லி மாப்பிள பாக்க கூட்டிட்டு வந்துருக்காங்க என்று, பிறகு மாப்பிள்ளை விஜய் என்பவர் மாடியில் இருந்து கீழே வருகிறார். அப்பொழுது விஜயும், சுருதியும் சின்ன வயசுல ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட், இப்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போறது நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு என்று பேசுகின்றனர்.
பிறகு பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையும் தனியாக போய் பேச சொல்கின்றனர்.. அப்பொழுது விஜய் ஸ்ருதியிடம் நான் கூட பெருசா கல்யாணத்தை இண்டரெஸ்ட் இல்லாம தான் இருந்தேன் ஆனா உன்ன பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு என்று சொல்கிறார், பிறகு கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு என்ன வேணும்னாலும்..
என்கிட்ட கேளு நான் வாங்கி தரேன் என்று சொல்லிவிட்டேன் ஒரு பாதுகாப்புக்காக இந்த கண்ண வச்சுக்கோ என ஸ்ருதிடம் கண்ணை கொடுக்கிறார். அதை பார்த்து ஸ்ருதி பயந்து போகிறார், பிறகு விஜய் இது டம்மி துப்பாக்கி தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது ஸ்ருதி ஸ்டுடியோவில் இருந்து போன் வந்தது போல் நைசாக எனக்கு வேலை இருக்கு ஸ்டுடியோக்கு போகணும் என்று கிளம்பி விட்டார்.. பிறகு ரவி வீட்டிலும் விஜயா ஓட தோழி தனலட்சுமி என்பவர் அவருடைய பொண்ணுக்காக ரவியை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.