சமையல்காரனுக்கு பெரிய இடத்து பொண்ணா.. ரவி மீது பொறாமைப்படும் மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

Siragadikka Aasai Octomber 02
Siragadikka Aasai Octomber 02

Siragadikka Aasai Octomber 02 : இன்றைய எபிசோடில் விஜயா ரவிக்காக ஒரு பென் பார்க்கிறார்.  நாளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு வராங்க அதனால் மீனாவிடம் வட பஜ்ஜி எல்லாம் நாளைக்கு ரெடி பண்ணிடு, ஆனா அவங்க வர நேரம் முத்து மட்டும் வீட்ல இருக்க கூடாது அவனால ஏதாவது பிரச்சனை வரும் என்று விஜயா சொல்வதை முத்து கேட்டுவிட்டு நான் இருக்க கூடாதுன்னு சொல்றீங்களா அப்ப கண்டிப்பா நான் இங்கதான் இருப்பேன்என்று சொல்கிறார்.

அடுத்து ரோகினி வித்யா வீட்டில் கிருஷ்க்கு சாப்பாடு கூட்டிக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது ரோகினி உடைய அம்மா எனக்கு இப்போ உடம்பு சரி ஆயிடுச்சு. நான் கிருஷ கூட்டிகிட்டு ஊருக்கு போறேன் என்று சொல்ல வித்யா ஏமா நீங்க இங்கே இருங்க கிருஷை இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்து விட்டுடலாம் என்று சொல்ல..

அம்மாவும் நல்ல யோசனையா தான் இருக்கு என்ன ரோகினி என்று கேட்க நீ இங்க இருந்து என்னை மாட்டி விடலாம் என்று பாக்குறியா அதெல்லாம் நீங்க இருக்க வேணாம் என ரோகிணி கோவமாக பேசுகிறார் உடனே அவங்க அம்மா உனக்கு கிருஷை பத்தி யோசனையே இல்லையா இவ்வளவு சுயநலமா..

உன் வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிக்கிற என்று சொல்ல பதிலுக்கு ரோகினையும் நீயும் சுயநலமா தான் என் விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணி வச்ச, என இருவரும் சண்டை போடுகின்றனர் பிறகு ஸ்ருதி வீட்டிலும் அவங்க அப்பா அம்மா ஸ்ருதிக்கு மாப்பிள்ளை பார்க்க ஒரு இடத்திற்கு போகின்றனர்.

அதனால் என்னோட சின்ன வயசு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறோம், நீயும் கிளம்பு என்று ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்குப்  கிளம்புகின்றனர்.. பிறகு ரவி ரெஸ்டாரண்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது விஜயா எங்க போற இன்னைக்கு பொண்ணு வீட்ல இருந்து வராங்க நீ இங்கேயே இரு என சொல்கிறார்.

அதற்கு ரவி இப்ப எதுக்கு கல்யாணம் என்று கேட்க இது பெரிய இடம் அந்த பொண்ணு நல்லா படிச்சிருக்கு உனக்கு கரெக்ட்டா இருக்கும்  என்று சொல்வதைக் கேட்டு மனோஜ் நம்மள விட பெரிய இடத்துல ரவி கல்யாணம் பண்ணா நம்மள மதிக்க மாட்டாங்களே..

என நினைத்து ஒரு சமையல்காரனுக்கு ஏன் இவ்வளவு பெரிய இடம் ஏதாவது மிடில் கிளாஸா பாருங்க அம்மா என சொல்கிறார் உடனே முத்து ரவிக்கு பெரிய இடத்துல பொண்ணு பார்க்கிறது இவனுக்கு பொறாமை அதனாலதான் மனோஜ் இப்படி பேசுகிறான் என சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்தது..