சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்கிறார் அதே போல் பார்வதி வீட்டில் இருக்கும் விஜயா பார்வதி இடம் பேசிக் கொண்டிருக்கிறார் நான் கூட்டி வந்த மருமகள் என எத்தனை முறை சொல்லி இருப்பேன் அவ எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வான்னு நான் நினைச்சு கூட பார்க்கல என புலம்பி கொண்டிருக்கிறார். பார்வதி நீ எல்லாம் மருமகளையும் சரிசமமா பார்த்து இருந்தா இந்த பிரச்சனை உண்டா என பேசுகிறார்.
அந்த சமயத்தில் அண்ணாமலை விஜயாவுக்கு போன் பண்ணுகிறார் போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்கிறார் அதற்கு விஜயா நான் வீட்டுக்கு வந்தா உங்க அம்மா ரோகினி விஷயத்தில் தலையிடக்கூடாது அவளை நான் அடிப்பேன் என்ன வேணாலும் பண்ணுவேன் என பேசுகிறார் அதற்கு உனக்கு மாமியார் என் அம்மா தான் நீ ரோகிணிக்கு மாமியாராய் இருந்தாலும் உனக்கு மாமியார் என் அம்மா தான் என ரெண்டு முறை சொல்லுகிறார்.
பிறகு ரோகிணி மற்றும் விஜயா இருவரும் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். வீட்டிற்கு உள்ளே விஜயா செல்கிறார் அப்பொழுது வீட்டில் உள்ளவர்கள் இருவரும் வருவார்களா மாட்டார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் விஜயா வந்தவுடன் ரோகிணியும் வருகிறார் உடனே பஞ்சாயத்து தேவையில்லை போல இரண்டு பேரும் ராசி ஆகிவிட்டார்கள் என பேச அதெல்லாம் ஒன்னும் கிடையாது என மூஞ்சியில் அடித்தது போல் பேசுகிறார்.
உடனே வீட்டில் உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜை விஜயா உன் பொண்டாட்டி ரோகினியை 4 அடி போட்டோ தான் திருந்துவா நாலு அடி அடிடா என ஏற்றி விடுகிறார். அதற்கு ஸ்ருதி இது டொமஸ்டிக் வயலன்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுவீங்க என பேசுகிறார். மனோஜ் எவ்வளவு சொல்லியும் அடிக்காததால் விஜயா எழுந்து ரோகிணியை அடித்துப் துன்புறுத்துகிறார். உடனே அண்ணாமலை எழுந்து தடுத்து நிறுத்துகிறார்.
பாட்டி விஜயாவை பார்த்து உனக்கு என்ன இன்னும் இருபது வயசுன்னு நினைப்பா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா பிரச்சனை நடந்தால் எப்படி அதை சால்வ் பண்ணனும்னு பாக்கணும் இன்னும் பெருசா ஆக்க கூடாது என பேச அதை காதில் வாங்காதது போல் ரோகிணியை இன்னும் அடித்து துன்புறுத்துகிறார். உடனே மனோஜ் வேகமாக நிறுத்துங்க அவளை அடிக்காதீங்க என பேசுகிறார்.
இந்த எல்லா விஷயமும் எனக்கு தெரியும் ரோகிணியோட தாய்மாமா அவர் கிடையாது அவர் கறிக்கடை பாய் என்பது எனக்கு தெரியும் என பேச என்ன சொல்ற என விஜயா கேட்கிறார். அதேபோல் அண்ணாமலையும் மனோஜை பார்த்து நேத்து அவ்வளவு கேட்டும் நீ எதுவுமே சொல்லலையே எதுவுமே தெரியாது தானே சொன்ன இப்ப மட்டும் எப்படி தெரியனும்னு சொல்ற என கேட்க ஆமா எனக்கு தெரியும் நீங்க எல்லாம் திட்டுவீங்கன்னு தான் சொல்லல என தன் மீது பழியை போட்டுக் கொள்கிறார் இதனால் விஜயா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
அவளை காப்பாற்றுவதற்காக நீ பொய் சொல்லாத எனவும் கேட்கிறார். அடுத்த நாள் எபிசோட்டில் ரோகினி இடம் சத்தியம் கேட்கிறார்கள் இதற்கு மேல் எதையும் மறைக்காம இருப்பியா எனவும் கேட்கிறார்கள் அதற்கு ரோகிணி திருத்திருன்னு முழிக்கிறார்.