சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துமீனா இருவரும் க்ரிஷ் பிறந்தநாளுக்கு சென்றுள்ளார்கள் அங்கு ரோகினியின் அம்மா ரோகிணியின் கதையை கூறுகிறார் ஆனால் ரோகிணி தன்னுடைய மகள் என்பதை கூறாமல் தன் மகள் ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த வயதானவர் இறந்துவிட்டார் எங்களின் வற்புறுத்தால்தான் அந்த திருமணம் நடந்தது எனக் கூறுகிறார்.
மேலும் முத்து உங்க மகளை வர சொல்லுங்க இந்த பச்சை குழந்தையை விட்டுட்டு அவங்களோட வாழ்க்கை தான் முக்கியமா அதை நான் கேள்வி கேட்கணும் என கூறுகிறார். அதற்கு மீனா நீங்க சும்மா இருங்க அவங்களே இப்பதான் நல்லா இருக்காங்களா அவங்களை இன்னும் கஷ்டப்படுத்த நினைக்கிறீர்களா அவர்களே தானா வருவாங்க என பேசுகிறார்கள்.
அதே போல் கேக்கை வெட்டி முடித்துவிட்டு காரில் கிளம்பி விடுகிறார் முத்து அதன் பிறகு ரோகிணி உள்ளே வந்து க்ரிஷ்கு கேக் ஊட்டி விடுகிறார். அடுத்த காட்சியில் மீனா திடீரென கிரிஷை தத்தெடுத்துக் கொள்ளலாமா என கேட்கிறார் அதற்கு நான் நினைச்சேன் நீயே சொல்லிட்டியே என பேசுகிறார் முத்து உடனே கோவிலுக்கு செல்கிறார்கள்.
சாமியிடம் கேட்டு விடலாம் என பேப்பரில் வேண்டும் வேண்டாம் என எழுதி சாமிக்கு வைத்து பிறகு எடுக்கிறார்கள் அப்பொழுது வேண்டாம் என வருகிறது இதனால் மீனா அதிர்ச்சி அடைகிறார் ஆனால் சாமியே சொன்னதால் வேண்டாம் என முடிவு செய்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார்கள்.
மற்றொரு பக்கம் விஜயா பரதநாட்டிய கிளாசை ஆரம்பித்து விட்டார் அதில் நிறைய கூட்டம் அள்ளுகிறது உடனே பார்வதியை பார்த்து இன்னைக்கு தான் உருப்படியான ஐடியா கொடுத்திருக்கிறாய் என பேசுகிறார் இந்த சமயத்தில் புதிய பெண் ஒருவர் கிளாசுக்கு வருகிறார் ஆனால் அரை மணி நேரம் தான் அதற்குள் நான் வந்து விடுவேன் என ஒருவர் மிரட்டி விட்டு செல்கிறார் அந்த பெண் பக்கத்தில் அதற்குள் இன்னொருவன் வந்து நிற்கிறார் இது விஜயாவுக்கு பெரிய தலைவலியை உண்டு பண்ண போகிறது என தெரிகிறது.
சீரியல் சூடு பிடிப்பதற்காக இன்னும் இரண்டு நபர்களை உள்ளே இழுத்து போட்டுள்ளார்கள் என தெரிகிறது. அதேபோல் மீனா முத்து இருவரும் க்ரிஷ் அம்மா உயிரோடுதான் இருக்கிறார் அவரை பெத்து போட்டுவிட்டு வேற எங்கேயோ போயிட்டார் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் மீனா அதற்கு குழந்தையையே மறைச்சுட்டா அவ இந்நேரம் எவன ஏமாற்றுகிறார்களோ எந்த கேனையை ஏமாந்தினாலோ என மனோஜ் கூறுகிறார் உடனே நெட்டிசன் நீதாண்டா அந்த கேனையன் எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.