Siragadikka Aasai : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் கண்டு வருகிறது. இதில் முத்து மற்றும் மீனா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது அண்ணாமலைக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் பணம் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. கொஞ்ச நாட்களாக முத்து மற்றும் மீனா இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டை போட்டு வந்த நிலையில் தற்போது தான் இருவரும் பழையபடி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் முத்து மற்றும் மீனாவிற்கு இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டு காதல் அதிகரிக்க போகும்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவின் அம்மா ஆடி மாசம் வருவதால் மீனாவை அவங்க வீட்டிற்கு அழைக்க வந்திருக்கின்றனர்.
மீனாவின் அம்மா முத்த கிட்ட மீனா இந்த மாசம் ஃபுல்லா எங்க வீட்ல தான் இருக்கணும் அதனால அழைச்சிட்டு போறோம் என்று சொல்லி கூப்பிடுகின்றனர். வீட்டுக்கு கிளம்பும் பொழுது மீனா மாமனாரிடம் மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுங்க என்று சொல்கிறார், உடனே விஜயா நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பு என சொல்வதும் மீனா கிளம்புகிறார்.
மீனா வீட்டை விட்டு போகும்போது முத்து ஒரு மாதிரி பீல் பண்ணுகிறார். பிறகு முத்து அவங்க அப்பாவிடம் சென்று அம்மாவும் ஆடி மாசத்துக்கு அவங்க வீட்டுக்கு போக மாட்டாங்களா என்று கேட்கிறார் அண்ணாமலை ஏன் என கேட்க அம்மா இல்லனா ஒரு மாசம் நீங்க நிம்மதியா இருக்கலாம் இல்ல அப்பா என்று சொல்கிறார்.