விஜயாவையே ஏய் என எதிர்த்துப் பேசிய மனோஜ்… ரோகிணி போட்ட கண்டிஷன்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதிக்கு ரோகிணி ஃபோன் செய்கிறார் அப்பொழுது என்ன நடக்கிறது என தெரியுமா என கேட்க எல்லாம் தெரியும் பாட்டி ஊரிலிருந்து வந்திருக்காங்க உங்க பஞ்சாயத்தை முடித்து வைப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க என்பது போல் பேசுகிறார். அதற்கு ரோகிணி ஏன் சிச்சுவேஷன் யாருக்குமே புரியலை என்னோட சைடுல இருக்கிற நியாயத்தை யாருமே கேட்கல என பேசுகிறார் உடனே அமைதியாக இருந்த சுருதி நீங்க வீட்டுக்கு வாங்க நாங்களும் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம் அங்க போய் பார்த்துக்கலாம் என பேசுகிறார்.

அவங்களுக்கு ஆள் சேக்குறாங்க என சுருதி ரவி இடம் கூறுகிறார் ஆனால் ரோகிணியும் அதேதான் நினைக்கிறார் நம்ம பக்கம் யாருமே பேசலையே என பேசுகிறார். வீட்டிற்கு பாட்டி வருகிறார் அப்பொழுது முத்து எங்கே என கேட்க முத்து பாட்டி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மனோஜ் உள்ளே இருந்து வருகிறார்.

பாட்டி ரோகினிக்கு முதலில் கால் பண்ணு என சொல்லுகிறார் ஆனால் ரோகிணி எடுக்க மறுக்கிறார் பிறகு மீண்டும் முயற்சி செய்கிறார் அதற்கு எடுக்காததால் உடனே பாட்டி உன் பொண்டாட்டி கிட்ட என்ன ஈகோ நீயே போய் நேர்ல கூட்டிக்கிட்டு வா என்பது போல் பேச அதெல்லாம் முடியாது நான் அங்க  போன என்னோட இமேஜ் என்ன ஆகிறது நான் இறங்கி போன மாதிரி ஆகிவிடும் என பேச அதற்கு முத்து திட்டுகிறார்.

மேலும் மனோஜ் அதெல்லாம் வேண்டாம் நானே இன்னொரு டைம் கால் பண்ணி பார்க்கிறேன் என கால் செய்கிறார் உடனே ரோகினி எடுக்கிறார் பாட்டி வீட்டுக்கு கூப்பிடுறாங்க என பேச அப்ப கூட பாட்டி தான் கூப்பிடுறாங்க நீயா கூப்பிடல என ரோகிணி பேசுகிறார். அதெல்லாம் இருக்கட்டும் நீ வீட்டுக்கு வா என பேச நான் வீட்டுக்கு வரணும்னா ஒரு கண்டிஷன் என மனோஜ்க்கு கண்டிஷன் போடுகிறார்.

நான் வீட்டுக்கு வந்தா ஆன்ட்டி என்னை திட்டக்கூடாது அடிக்க கூடாது என கேட்கிறார் அதற்கு முத்து அது அவங்க வந்த பிறகு தானே தெரியும் நாம எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும் என பேசுகிறார். உடனே பாட்டி இடம் மனோஜ் இதனைக் கூற அதற்கு பாட்டி நான் இருக்கும்போது எப்படி அடிக்க முடியும் நான்தான் இருக்கேனே நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசுகிறார் உடனே மனோஜ் அதான் பாட்டி எல்லாத்தையும் பார்த்துக்கிறாங்க நீ வா முதலில் என பேசுகிறார்.

உடனே ரோகினி என்னை அடிப்பதற்கு உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு மனோஜ் மத்த யாரு அடிச்சாலும் என்னால பொறுத்துக்கிட்டு இருக்க முடியாது என பேசுகிறார் நான் வருகிறேன் எனவும் கூறி விடுகிறார். அதேபோல் விஜயாவுக்கும் போன் செய்து வர வைக்கிறார்கள் அதற்குள் ரோகிணி வந்து விடுகிறார். அடுத்த நாள் எபிசோடில் ரோகிணியை விஜயா பலர் பலர் என அறைக்கிறார் அப்பொழுது மனோஜ்க்கு கோபம் வந்து ஏய் என கத்துகிறார்.

அப்பொழுது ரோகிணி அடி வாங்குவதை பார்த்து மனோஜ் அவளை அடிக்காதீங்க என தன்னுடைய அம்மா விஜயாவிடம் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்பது போல் பேச விஜயா பொய் சொல்லாத என மனோஜை அடித்து வெளுத்து வாங்குகிறார்.