விஜயாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. மீண்டும் குடும்பத்துக்கே காது குத்திய ரோகிணி..

siragadikka aasai april 3
siragadikka aasai april 3

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி வீட்டிற்கு வருகிறார் வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லாமல் அனைவரின் காதிலும் பூ சுத்துகிறார் ஒட்டு மொத்த குடும்பத்தையும் முட்டாளாக ஆக்கினார்.

உலகில் ஏமாறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பாங்க என்பது போல் ரோகிணி ஒவ்வொரு முறையும் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் மலேசியா மாமா பணக்கார வீட்டு பெண் என்பதையெல்லாம் பொய் என்றால் அப்பொழுது நீ யார் என கேட்கிறார்கள் அண்ணாமலை குடும்பம்.

உடனே ரோகினிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னுடைய அப்பா மலேசியாவில் தான் இருந்தார் அவருக்கு அதிக குடிப்பழக்கம் அதனால் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அதனால் நான் குடும்பத்தை வெறுத்து சென்னைக்கு வந்து விட்டேன்.

எனக்கு இருக்கும் ஒரே பிரிண்ட் வித்யா தான் அதனால் வித்யாவுடன் இருந்தேன் அப்பொழுது தான் பார்வதி அத்தை வீட்டிற்கு மசாஜ் பண்ண சென்றேன், அதற்கு முன்பு எனக்கு மனோஜை பிடித்து விட்டது ஆனால் மனோஜ்க்கு ஒரு பணக்கார வீட்டு பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் என தெரிந்து கொண்டேன் அதனால் தான் நான் பொய் சொன்னேன்.

மனோஜ்ஜெய் திருமணம் செய்து கொள்வதற்காக தான் அப்படி கூறினேன் என கூறுகிறார். அதே போல் இங்கு இருக்கும் மீனாவின் நிலைமையை பார்த்தால் இதே நிலைமை எனக்கும் வந்துவிடும் என்று தெரிந்தது அதனால் நான் அனைத்து உண்மையையும் மறைத்து விட்டேன் நிறைய முறை உண்மையை சொல்லிவிடலாம் என யோசிப்பேன் ஆனால் மீனாவின் நிலைமையை பார்த்தால் எனக்கு சொல்லத் தோணாது எனக் கூறியுள்ளார்.

உடனே பாட்டி ரோகிணியை  திட்டி விட்டு விஜயாவை பார்த்து எல்லா பிரச்சனைக்கும் காரணம் உன் பேராசை தான் என திட்டுகிறார் அதான் வேலைக்கு போகல உங்க அப்பாவும் பணமும் அனுப்பல எப்படி நீங்க பணத்தை ரெடி பண்ணுனீங்க என கேட்க எனக்கான பாரலரை வித்து விட்டேன் என கூறுகிறார்.

பாருங்கள் ஏற்கனவே எனக்கு தெரியும் என அண்ணாமலை கூறுகிறார் அதற்கு முத்துவும் எனக்கும் தெரியும் எனக் கூறுகிறார் அண்ணாமலை முத்து தான் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார் என கூறினார்.

உடனே அண்ணாமலை இது மட்டும் தான் உண்மையா இல்லை இன்னும் ஏதாவது எங்களிடம் மறைக்கிறாயா என கேட்க வேறு எதுவும் கிடையாது இதுதான் உண்மை என்ன சத்தியம் சொல்லி கூறுகிறார் ஆனால் இப்ப கூட க்ரிஷ் விஷயத்தை அவர் கூறவில்லை அனைத்தையும் சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார் ரூட்னி அப்பொழுது மீனா முத்துவை முறைத்து பார்க்கிறார் இனிமேல் மீனாவுக்கு முத்துவிற்கும் ரோகிணி தரமான பதிலடி கொடுக்கப் போறார் என தெரிகிறது இன்னும் சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது