சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி பசிக்கிறது எனக் கூறியவுடன் மீனாவை விஜயா ஏதாவது ரோகினிக்கு பிடிச்சதாக செய்து கொடு என கூற உடனே முத்து அவங்க தான் விரதம் எடுக்கிறாங்களே அவங்க கையாலே சமைச்சு அவர்களே உப்பு இல்லாம சாப்பிடனும் என கூறுகிறார் அப்படி தானே நீங்க வேண்டிகிட்டது என பேச உடனே விஜயாவும் ஆமா நீயே வந்து சமைச்சு சாப்பிடு என கிச்சனுக்கு அழைத்து சென்ற சமைக்க விடுகிறார்.
அடுத்த நாள் காலையில் பூரி மீனா செய்துள்ளார் அதனை அனைவரும் சாப்பிட்டு அருமையாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சாப்பிட உட்காருகிறார்கள் அப்பொழுது முத்து நிறுத்துங்க சாப்பிடக்கூடாது என நிறுத்த சொல்கிறார் ஏனென்றால் விரதம் இருக்கிறீர்கள் நீங்கள் சாப்பிடக்கூடாது என கூறுகிறார் விஜயாவும் ஆமா நீ சாப்பிடக்கூடாது உடனடியாக எழுந்து போ என கூறி விடுகிறார்.
அதே மனோஜ் உன் பொண்டாட்டி விரதம் இருக்கிறாள் உன் மாமனார் ஜெயிலில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் கிடையாதா என கேட்கிறார் உடனே விஜயாவும் மனோஜ் சாப்பிட்டுக்கிட்டு இருந்த தட்டை பிடுங்குகிறார். இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்து எனக்கு தெரிந்த பார்லர் இருக்கிறது அங்கு போகலாமா என ஜீவாவிடம் கேட்கிறார் உடனே அங்கே போகலாம் என கூறுகிறார்.
ரோகிணி பார்லருக்கு முத்து ஜீவாவை அழைத்து செல்கிறார் அங்கு சென்றவுடன் ஜீவாவை பார்த்தவுடன் ரோகிணிக்கு சந்தேகம் வந்து விடுகிறது உங்கள் பெயர் என்ன என கேட்க ஜீவா என கூறியவுடன் மனோஜ்க்கு தகவல் கூறுகிறார் ரோகிணி உடனே மனோஜ் வந்துவிடுகிறார் போலீசில் புகார் கொடுத்து விடுகிறார்கள் ஒழுங்கு மரியாதையாக என் பணத்தை கொடுத்து விடு இல்லை என்றால் அவ்வளவுதான் என மனோஜ் மிரட்டுகிறார்.
கூலி திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா…
போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீவாவை அழைத்து செல்கிறார்கள் அங்கு சென்றவுடன் பணம் எல்லாம் கொடுக்க முடியாது என கூறி விடுகிறார் மற்றொரு பக்கம் மீனா நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதால் அவரை வான் பண்ணிவிட்டு வண்டியை எடுத்து வந்துள்ளார்கள் போலீஸ் உடனே முத்து வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் நடந்த விஷயத்தை மீனா கூறுகிறார் இந்த நிலையில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் இந்தப் பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இத்துடன் ப்ரோமோ முடிகிறது.