சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி பசிக்கிறது என கேட்க உடனே விஜயா மீனாவிடம் ரோகினிக்கு என்ன பிடிக்குமோ அதனை செய்து கொடு என ஆர்டர் போடுகிறார். ஆனால் அந்த சமயத்தில் முத்து வந்து விடுகிறார் முத்து வந்து நிறுத்து நிறுத்து பார்லர்மா நீங்களே சமைச்சு உப்பு இல்லாம நீங்களே சாப்பிடணும் அப்படிதான் வேண்டிக்கிட்டாங்க அப்பதான் உங்க அப்பா ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆவாரு அப்புறம் சாமி குத்தமாக்கி விடும் என ஒரேடியாக போட்டு தாக்குகிறார்.
உடனே விஜயாவும் ஆமாம் நானே மறந்துட்டேன் நீயே சமைச்சு நீயே சாப்பிடணும் வா நான் சொல்லித் தரேன் என கூப்பிட்டு செல்கிறார் அங்கு சென்று சாமானை விளக்கு என ஆர்டர் போடுகிறார் அதுமட்டுமில்லாமல் சமைக்கும் பொழுது உப்பு போட உப்பு பாட்டில் எடுக்க உடனே விஜயா வெடிக்கண பிடுங்கி உப்பு போடாமல் தான் சாப்பிட வேண்டும் என கூறி விடுகிறார். இப்படி ரோகினியை கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கூலி திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தரா…
மீனா ரோகினி பாவம் நானே சமைக்கிறேன் எனக் கூற அதற்கு அண்ணாமலையும் ஏன் நீ தான் சமைக்கணுமா ஒரு நாள் அவங்க சமைக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ ரெஸ்ட் எடு ஒரு நாள் என கூறி விடுகிறார். அடுத்த நாள் பூரி மீனா சுட்டு வைத்துள்ளார் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பூரி வாசம் சூப்பராக இருக்கிறது மசாலா அருமையாக இருக்கிறது என புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் சுருதி நீங்க ஹோட்டல் வச்சீங்கன்னா அவ்வளவுதான் ரவிக்கே டப் கொடுப்பீங்க என பேசுகிறார்.
ஆனாலும் விஜயா மீனாவை இழிவாக பேசுகிறார் அடுத்த காட்சியில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சாப்பிட வருகிறார்கள் அந்த சமயத்தில் முத்து வந்து விடுகிறார் உடனே ஸ்பீடா ஓடுற ட்ரெயினை நிறுத்துவது போல் ஸ்டாப் என கூறுகிறார் எதற்காக என கேட்க நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடணும் அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு நீங்க விரதம் பத்திய சாப்பாடு தான் சாப்பிடணும் என கூறுகிறார் இல்லனா உங்க அப்பா ஜெயிலில் இருந்து வர மாட்டார் என முத்து கூறி விடுகிறார் உடனே விஜயா ரோகினி எழுந்திரு என ஒரேடியாக அவரை விரட்டுகிறார்.
என்ன ஆட்டம் போட்ட வசமா மாட்டிகிட்டியா… ரோகினியை படுத்தி எடுக்கும் விஜயா… குஷியில் முத்து
ரோகினையும் சாப்பிடாமல் எழுந்து செல்கிறார் ஆனால் மனோஜ் சாப்பிடுவதற்கு கையை வைப்பதற்கு முன்பு முத்து நிறுத்து உன் பொண்டாட்டியே சாப்பிடல நீ மட்டும் சாப்பிடுறியா உங்க மாமனார் வெளியில வர வேண்டாமா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அதற்கு எனக்கு பசிக்கிறது என மனோச் சொல்ல உடனே மீனா விடம் நான் விரதம் இருந்தேனா நீ சாப்பிடுவியா என முத்து கேட்கிறார் இல்லை என மீனாவும் கூறுகிறார் அதே போல் நீ விரதம் இருந்தப்ப நான் சாப்பிடாமல் இருந்தேன் இல்ல எனக் கேட்க ஆமாம் என மீனா கூறுகிறார்.
மற்றொரு பக்கம் சுருதி விரதம் இருந்தா ரவி நீ சாப்பிடுவியா டா என கேட்க நான் சாப்பிட மாட்டேன் என கூறுகிறார் அதே போல் ரவி விரதம் இருந்தால் பல குரல் நீங்க சாப்பிடுவீங்களா என கேட்க நான் சாப்பிடுவேன் எனக்கு பசிக்குது இல்ல என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் அன்னைக்கு அம்மா சாப்பிடலைன்னு அப்பாவும் சாப்பிடாம இருந்தாரு. அதுக்கு பேருதான் பாசம் என கூற மனோஜ் இப்ப நான் என்னதான் செய்யணும் என கேட்கிறார் நீயும் சாப்பிடக்கூடாது நீயும் விரதம் எடுக்கணும் என முத்து கூறி விடுகிறார் இல்லன்னா மலேசியாவில் இருந்து எதுவுமே கிடைக்காது எனக் கூற உடனே விஜயா தட்டை புடுங்கி கொண்டு நீயும் சாப்பிட வேண்டாம் போ என கூறி விடுகிறார்.
மற்றொரு காட்சியில் முத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ஜீவா போன் பண்ணி ஹோட்டலுக்கு வர சொல்கிறார் உடனே முத்துவும் கிளம்புகிறார். அடுத்த எபிசோடில் ஜீவா ரோகிணி பார்லருக்கு சென்றுள்ளார் அப்பொழுது ரோகிணி கண்டுபிடித்து விடுகிறார் உடனே மனோஜ்க்கு கால் பண்ணி உடனே பார்லருக்கு வா அந்த ஜீவா வந்திருக்கா என கூறுகிறார் அந்த சமயத்தில் மனோஜ் அங்கு செல்கிறார் ஜீவா மனோஜை பார்த்த அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.