சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடமிருந்து பணத்தை ஆட்டையை போட்டு சென்ற ஜீவா என்பவர் முத்துவின் காரில் வந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் கனடா கண்ட்ரி பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இன்னும் கொஞ்ச காலத்தில் சென்னையும் அந்த நாடு மாறி மாறிவிடும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அங்கு குளிர் அதிகம் ஆனால் இங்கு அப்படி கிடையாது என ஜீவா பேசுகிறார்.
நீங்க கனடா வேலை விஷயமா போனீங்களா என விசாரிக்க அதற்கு இல்ல பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் ஏன் நீங்க ஏதாவது கனடா போக போறீங்களா என கேட்க இல்ல என் அண்ணன் தான் கனடா போகணும்னு ஒத்த காலில் நிற்கிறான் என முத்து கூறுகிறார் மற்றொரு பக்கம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஜீவாவை தேடி அலைகிறார்கள் அப்பொழுது ஒரு ஏஜென்சி இடம் விசாரிக்க அவர்கள் அட்ரஸ் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார்கள்.
மற்றொரு பக்கம் விஜயா ரோகினி இடம் ஓடிவந்து உங்க அப்பா ஜெயலில் இருக்கிறார் அதனால் நீ உண்ணாவிரதம் இருக்க வேண்டும் ஒரு மண்டலம் என பேசுகிறார் அதற்கு நான் ஏன் இருக்க வேண்டும் நீங்களே இருக்கலாமே என பேச எங்க அப்பாவா ஜெயில்ல இருக்காரு உங்க அப்பா தான இருக்காரு நீ தான் இருக்கணும் அந்த சாமி சக்தி வாய்ந்த சாமி கண்டிப்பா உங்க அப்பா வெளியில வந்துருவாரு என கூறுகிறார்.
உடனே விஜயா அண்ணாமலையிடம் எங்கே போனீங்க கோவிலுக்கு போகணும் என கூறுகிறார் அதே போல் சுருதி, ரவி, மீனா, என அனைவரிடமும் கூற அதற்கு எதற்காக என சுருதி கேட்கிறார் அப்பொழுது விஜயா அப்பதான் ரோகினியின் அப்பா வெளியில் வருவார் எனக் கூற அதற்கு வக்கீல பார்த்தாலே போதுமே அவர் மேல தப்பு இல்லன்னு நிரூபிச்சாலே போதுமே என பேசுகிறார். அதற்கு விஜயா அப்படிலாம் பேசாத சாமி குத்தமாகி விடும் என கூறுகிறார்.
உடனே விஜயா அந்த முத்துவையும் வர சொல்லணும் குடும்பத்தோடு வருகிறேன் என வேண்டிக் கொண்டேன் என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை மீனாவிடம் சொல்லி நான் வர சொன்னேன்னு சொல்லு கண்டிப்பா வருவான் என பேசுகிறார் உடனே மீனா முத்துவிடம் போன் பண்ணுகிறார். அப்பொழுது சவாரியில் இருக்கிறேன் என கூற நீங்க விட்டுட்டு வாங்க இல்லன்னா அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டு போயிடுங்க என பேசுகிறார் மீனா.
உடனே முத்துவும் அந்த ஜீவாவிடம் கேட்க பரவால்ல நான் சென்னையில் இருக்கிற வரைக்கும் நீங்க தான் என்ன கூட்டிட்டு போகணும் அதனால இதெல்லாம் ஒரு விஷயமா எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது நீங்க பத்து நிமிஷத்துல வந்துருங்க என கூறுகிறார் அதற்கு முத்து வேற யாராவது இருந்தா வேற மாதிரி திட்டுவாங்க என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.